என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை வருகை"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர்.
- மத்திய குழுவினர் நாளை காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வந்துள்ளனர்.
புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய குழு வருகை தந்துள்ளனர்.
குழுவில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி, பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய குழுவினர் நாளை காலை முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.
அதற்கு முன்பு இன்று மாலை 7 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி நாளை சென்னை வருகிறார்.
- விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ள 31ம் தேதி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சென்னை வருகிறார்.
அதன்படி, சென்னை வரும் ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்துக் கொள்ள உள்ளார்.
துணை ஜனாதிபதி வருகையால், நாளை சென்னை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர, ஏனைய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டன. எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வந்தது.

ஆனால், நேற்று திடீரென ராகுல்காந்தியின் வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவர் சென்னை வந்து 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகே நாகர்கோவில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
இதனால், நேற்று இரவு தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை. இன்றும் நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் செல்ல இருப்பதால், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு இல்லை.
எனவே, நாளை (வியாழக்கிழமை) காலை சென்னை அண்ணா அறிவாலயம் வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார். தற்போதைய நிலையில், கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி, திருச்சி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதால் சிக்கல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #RahulGandhi #MKStalin
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 6-ந் தேதி நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிந்ததும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். நேற்று ஓய்வு எடுத்த வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நாளை (சனிக்கிழமை) சென்னை வந்து சேருகிறார்கள். வீரர்கள் தனித்தனியாக வந்து இணைவார்கள் என்று தெரிகிறது. #IndianCricketTeam #INDvWI
பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி, இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனி விமானத்தில் இன்று மதியம் சென்னை வரும் தாதி ஜானகி, அங்கிருந்து அண்ணா நகரில் உள்ள தமிழக மண்டல தலைமையகத்திற்கு வருகிறார். இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க ஊர்வலமாக அழைத்து வரப்படும் அவருக்கு தலைமையகத்தில் தாய்மார்கள் பூ மற்றும் கைவிளக்குகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின்னர் மாலை 6 மணியளவில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தாதி ஜானகி ஆசீர்வாத உரை நிகழ்த்துகிறார். இதில், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக இயக்கத்தின் கூடுதல் செயலர் ராஜயோகி பிரிஜ் மோகன் (டெல்லி) பொன் யுகத்திற்கான இறைவனின் ஞானம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
நாளை காலை சுங்குவார்சத்திரத்தில் உள்ள பிரம்மா குமாரிகளின் சிறப்பு பயிற்சி மைய கட்டிடத்திற்கான பூமி பூஜையில் தாதி ஜானகி பங்கேற்கிறார். அதன்பின்னர் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் விழாவில் ஆசீர்வாத உரை நிகழ்த்துகிறார். இதையடுத்து இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். மறுநாள் (செப்-5) சென்னையில் இருந்து புறப்பட்டு இயக்க தலைமையகம் உள்ள மவுண்ட் அபுவிற்கு புறப்பட்டுச் செல்கிறார்.
103 வயது நிரம்பிய தாதி ஜானகி, தனது வயது முதிர்வு மற்றும் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆன்மீக சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #BrahmaKumaris #DadiJanaki

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அமித்ஷா நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்.
நாளை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பொறுப்பாளரும், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தேசிய செயலாளர் குபேந்திர யாதவ் எம்.பி., மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (தமிழ்நாடு), சுவாமிநாதன் எம்.எல்.ஏ., (புதுச்சேரி) மற்றும் விஷால் ஜோலி (அந்தமான் நிகோபர் தீவு) உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
அதன்பிறகு 11.30 மணிக்கு அமித்ஷா, தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுக்கிறார். பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரையில் உள்ள அரங்கில் தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முன்தயாரிப்புக்கான கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு அரசியல் விவகார குழுவைச் சேர்ந்த 11 பேரிடம் 39 தொகுதிகள் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்த விவாத நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த கூட்டம் பகல் 2 மணி வரை நடக்கிறது.
பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை சங்க் பரிவார் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிக்கிறார்.
தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திப்பது குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 3 ஆயிரம் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும் விவாதிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வியூகம் வகுப்பது குறித்தும் அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை அந்தமான் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்ப நேரம் மாறுபட வாய்ப்பு உள்ளது. பின்னர் இரவு தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் (10-ந்தேதி) காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி அமித்ஷா சென்னை வந்தார். அதற்கு பிறகு கடந்த ஆண்டு மே 10 மற்றும் 11-ந்தேதிகளில் சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் கடந்த ஆகஸ்டு 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை, கோவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பயணமும் ரத்தானது. எனவே 1½ ஆண்டுக்கு பிறகு தற்போது அமித்ஷா சென்னை வருவது குறிப்பிடத்தக்கது. #AmitShah #BJP #tamilnews






