search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deputy cm panneerselvam"

    நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

    இதையடுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  



    இந்நிலையில்,  நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று இரவு நேரில் சந்தித்தனர். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital 
    மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பிளாட்டினம் ஜூப்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.

    இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Praggnanandhaa #SecondYoungestGrandmaster #ChessGrandmaster #OPanneerSelvam
    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா. இவன் கடந்த 2013-ம் ஆண்டில் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். அதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றான். இதன்மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தான். 

    இதற்கிடையே, இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்து கொண்டான். தனது 9-வது சுற்றுப் போட்டியில், ரேட்டிங்கில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டான். 

    இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றான்.



    இந்நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் டுவிட்டரில் கூறுகையில், சதுரங்க போட்டியில் சர்வதேச அளவில் தொடர் வாகைகள் சூடி உலகின் இரண்டாம் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி, இந்தியாவை பெருமையடையச் செய்த சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆர்.பிரக்ஞானந்தா மென்மேலும் சாதனைகளைத் தொடர எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Praggnanandhaa #2ndYoungestGrandmaster #ChessGrandmaster #OPanneerSelvam
    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவிட்டார். #Panneerselvam #Mullaperiyaerdam
    குமுளி:

    கேரள மாநிலம் குமுளியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக விவசாய சாகுபடிக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக 100 கன அடி தண்ணீரும் இன்று திறந்து விடப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து விட்டார்.

    இதுதொடர்பாக பொதுப் பணித்துறையினர் கூறுகையில், விவசாயம் மற்றும் குடிநீருக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பேபி அணையை பலப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி தமிழக அரசு செயல்படும் என்று தெரிவித்தார்.
    #Panneerselvam #Mullaperiyaerdam
    ×