என் மலர்

  செய்திகள்

  நெஞ்சுவலியால் தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதி - ஈபிஎஸ் , ஓபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தனர்
  X

  நெஞ்சுவலியால் தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதி - ஈபிஎஸ் , ஓபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital
  சென்னை:

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

  இதையடுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.    இந்நிலையில்,  நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று இரவு நேரில் சந்தித்தனர். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital 
  Next Story
  ×