search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappadi palanisamy"

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வழிச்சாலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலை வந்தே தீரும் என்று நேற்று பேட்டியின் போது கூறினார். அவர் கூறும் போது போக்குவரத்து அதிகமாக உள்ளதால் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் அவசியம் தேவை. இதற்காக சேலம்-சென்னை 8 வழி சாலை வந்தே தீரும் என்று கூறினார்.

    இதை தொடர்ந்து முதலமைச்சரின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள் கூறுகையில், எங்கள் உயிர் போனாலும் விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு ஒரு சொல்லும், தேர்தலுக்கு பின்பு ஒரு சொல்லும் மாறி, மாறி பேசுகின்றனர். எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    அன்பின் திருவுருவமான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை திருநாளாக கொண்டாடி மகிழும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #easterday #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தியாகத்தின் மறுவுருவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ‘‘பகைவர்களுக்கும் நன்மை செய்யுங்கள், அப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்’’ என்றுரைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சித்ரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக அனுசரித்து, அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் வாழும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

    இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #easterday #EdappadiPalaniswami

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #TamilNewYear

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து வருமாறு:-

    திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழனென்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா!

    தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #TamilNewYear

    சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. 

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். 

    இந்த சந்திப்பிற்கான காரணம், அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறியவும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளுக்கும் மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை கடிதம் வழங்கினார். #edappadipalanisamy #pmmodi #metrotrain
    சென்னை:

    திருப்பூரில் நடைபெற்ற விழாவில், சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமை அடைந்து உள்ளது.

    இந்தநிலையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளுக்கும் மத்திய அரசு 50% நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், 2-ம் கட்ட மெட்ரோ பணிகளை தொடங்க உரிய அனுமதியை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூரில் பிரதமர் மோடியிடம் நேரில் கடிதத்தினை தந்த முதல்-அமைச்சர் பழனிசாமி இது குறித்து வலியுறுத்தினார்.  #edappadipalanisamy #pmmodi #metrotrain
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பலியான அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம், ஆஞ்சநேயர் கோயிலில், 27.1.2019 அன்று கைங்கர்யப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை பிரதான சாலையைச் சேர்ந்த வெங்கடேசன் கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    கைங்கர்யப்பணியின் போது, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வெங்கடேசன் குடும்ப நிலையினைக் கருத்திற்கொண்டு, சிறப்பினமாக அவருடைய குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார். #cmedappadipalanisamy #lkgandukg
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் சோதனை முயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில்  3 ஆண்டுகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையங்களில் நான்கு முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது.

    அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிகளில் ஜனவரி முதல் இந்த வகுப்புகள் துவங்க ஏற்பாடு நடைபெற்றது.

    இந்நிலையில்,சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் பழனிசாமி அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

    7 குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யுகேஜி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான வரும் கல்வி ஆண்டில் ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #cmedappadipalanisamy #lkgandukg
    கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, ஐந்து மாநில தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிவாரண நிதியாக மத்திய அரசு எவ்வளவு தருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

    காவிரி வழக்கில் இதுவரை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு மதித்ததாக வரலாறு இல்லை.

    கர்நாடக அரசு கபினி, ஹேமாவதி போன்ற அணைகளை கட்டியதால் தமிழகம் பாலைவனமாக திகழ்கிறது. மேலும் மேகதாது அணை கட்டி தண்ணீரை தேக்கினால் தமிழகத்திற்கு எப்படி நீர் கிடைக்கும்?

    காவிரி நீரை நம்பி தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளன. 3 அணைகளில் போதிய நீர் இருந்தும் தரமறுத்த கர்நாடகா மேலும் அணை கட்டினால் எப்படி தண்ணீர் கிடைக்கும்? கர்நாடக அணை கட்டும்போது ஒவ்வொரு முறையும் தமிழகம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami 
    அரசியல் லாபத்துக்காக பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார் என்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #pmmodi

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கி 2 வாரத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால் பல குடும்பங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க வில்லை.

    இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நிதி வழங்க வேண்டும் என கேட்டுள்ளதாக கூறினார்.

    ஆனால் தற்போது கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என கூறுகின்றனர். எனவே இதில் முரண்பாடு உள்ளது. அவர்கள் சந்தித்த சில நாட்களிலேயே தேர்தல் கமி‌ஷன் 20 தொதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுவது சாத்தியமா? என கேள்வி எழுப்பி உள்ளது.

    எனவே முதல்வர் மக்களுக்காக பிரதமரை சந்திக்க வில்லை. அரசியல் லாபத்திற்காக சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது. மத்தியில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றதில் இருந்து இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.97,356 கோடி மாநில அரசால் கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ரூ.4,242 கோடி நிதியே வழங்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் மொழி பெயர்ப்பில் தவறு ஏற்பட்டுள்ளதால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் தடை செய்து ஆங்கில மொழியில் படித்து விடை அளித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை வாரியத்துக்குதான் உரிமை உள்ளது. ஆனால் தற்போது மத்திய அரசு வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது.

    டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்காதது மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் ஒன்றி ணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் 2 வருடங்களாக அனைத்து கட்டமைப்புகளும் சரியாக இயங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவில் தீர்ப்பு சமூக நீதிக்கான போராட்டம். இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை கேரள அரசுக்கு உள்ளது. எனவே அவர்களை குற்றம் சொல்லக்கூடாது.

    மக்கள் விரோத போக்கில் மத்திய மாநில அரசுகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு லோக்ஆயுதா சட்டம் அமல்படுத்த அக்கரை காட்டவில்லை. எனவே அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்தால் வருகிற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர். #edappadipalanisamy #pmmodi

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கிட முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Edappadipalanisamy
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கீரமங்கலம், பனங்குளம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆலங்குடி தொகுதியில் லட்சக்கணக்கான பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரத்துக்கு ரூ.1,100 என்பதை போல, பலா மரங்களுக்கும் அரசு நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும். உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    தென்னைக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அரசு வாகனம் எரிப்பு வழக்கில் சில மர்மநபர்கள் செய்த தவறுக்கு, 62 அப்பாவி மக்களை கைது செய்தது தவறு. அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    சேதமடைந்த அனைத்து மரங்களையும் உரிய முறையில் வருவாய் துறையினர் கணக்கிடவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சேதங்களை முறையாக கணக்கிட்டு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Edappadipalanisamy
    கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்- அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #gajacyclone #edappadipalanisamy #gajastorm
    சென்னை:

    வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.  இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், புயல் பாதிப்பு பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    நிவாரண முகாம்களில் தங்கியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டி, சேலை வழங்கப்படும்.  முகாம்களில் தங்கியுள்ள பெரியோர், பெண்கள், குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் வழியே பால் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கஜா புயலால் இறந்தோரூக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முன்பே அறிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம், சாதாரண காயத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

    புயலால் உயிரிழந்த 1,181 ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், 14,986 கோழி, பறவைகளுக்கு தலா ரூ.100 வழங்கப்படும்.

    உயிரிழந்த 231 பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், 20 காளை மாடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 19 கன்றுகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #gajacyclone #edappadipalanisamy #gajastorm
    வழக்கு முடிந்ததும் 8 வழி சாலை பணிகள் தொடங்கும் என்று சேலத்தில் மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway

    சேலம்:

    சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை மெயின்ரோடு பிரிவில் சேகோசர்வ் எதிரில் ரூ. 22 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

    8 வழிச்சாலை அமைப்பதற்கு நாம் முயற்சித்தோம். அது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பல பேர் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய வழக்கு முடிந்த பிறகு அந்த பணிகள் தொடங்கும்.சில பேர் 8 வழிச்சாலை சேலத்திற்கு தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கின்றனர். சேலம் வழியாகத்தான் இந்த சாலை செல்கிறது அவ்வளவு தான்.

    இன்றைக்கு கோவையாக இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, கரூர், திண்டுக்கல், நாமக்கல்லாக இருந்தாலும் சரி சென்னைக்கு போக வேண்டும் என்றால் சேலம் வழியாகத்தான் போக வேண்டும். சேலத்துக்கு மட்டும் தான் 8 வழிச்சாலை என்று தவறான கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் சேலத்தில் இருக்கிறார். அதனால் தான் சேலத்திற்கு 8 வழிச்சாலை கொடுத்தார் என்று சொல்கிறார்கள். எனக்கென்ன 10 தொழிற்சாலையா? சேலத்தில் ஓடிக் கொண்டி ருக்கிறது. 8 வழிச்சாலை போடுவதற்கு. ஒரு தவறான கருத்தை வைத்து எதிர்க்கட்சிகள் எல்லாம் தவறான விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறது.

    நாளுக்கு நாள் வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. கனரக வாகனம் அதிகமாக போயிக் கொண்டு இருக்கின்றது. இதனால் சாலையின் தேவையும் அதிகரிக்கின்றது. புதிய சாலைகள் அமைக்க வேண்டும். சாலைகள் விரிவுபடுத்த வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள முடியும்.

    இந்த 8 வழிச்சாலை அமைக்கின்றபோது கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் மிச்சமாகும். இதனால் எரிபொருள் மிச்சமாகும். மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நேரமும் குறைகிறது. பயண நேரம் மிச்சமாகிறது. அதுமட்டுமல்ல அந்த சாலைகள் விபத்து இல்லாத சாலையாக தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும்.

    இப்படிப்பட்ட சாலையை அமைக்கப்படும்போது தான் புதிய புதிய தொழிற்சாலைகள் வரும். இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும். வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு தேவையான பொருளாதார வசதி கிடைக்கும்.

    இப்படிப்பட்ட ஒரு நலத்திட்டங்கள் வருகின்றபோது பொதுமக்கள் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்றால் தான் நம்முடைய நாடு முன்னுக்கு வர முடியும். வெளி நாடுகள் விரைவு சாலைகளால் தொழில் வளம் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway

    ×