search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Salem green expressway"

    8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கிறது என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது மக்களுக்கு உயிர் முக்கியம். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசியிருக்கிறார் பழனிசாமி. இதுதான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம்.

    சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப்போவதில்லை.

    இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23-ந்தேதி தெரிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குஷ்பு கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் சகோதரி குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

    பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும்.

    ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.

    உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர் தான் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா?

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம் என்பதால் ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் தடை வந்துள்ளது.


    8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய மந்திரி பியுஸ்கோயலும் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், பின் நோக்கம் இருப்பதாகவும் யாரும் நினைக்க வேண்டாம்.

    நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.

    பிச்சை எடுப்பவர்கள் பிச்சை போடுபவர்களை தர்ம பத்தினி என கூறுவார்கள். அதுவே அவர்கள் பிச்சை போடாவிட்டால் அவர்களை மூதேவி என்பார்கள்.

    கூட்டணிக்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க. ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து பொதுவாக 3 விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. #SalemChennaiGreenCorridor #8LaneRoad
    சென்னை:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 37 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு தடை விதித்தனர். தமிழக அரசின் அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த திட்டத்துக்காக மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியதும் செல்லாது என்று அறிவித்தனர்.

    மேலும் யாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களுக்கே அந்த நிலத்தை 8 வாரத்துக்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது.

    பொதுவாக 3 விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    முதலில் 8 வழி பசுமை சாலைத்திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற 37 மனுதாரர்களும் சுப்ரீம் கோர்ட்டில் “ஹேவியட்” மனு தாக்கல் செய்யலாம். 8 வழி சாலை திட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதேனும் பிறப்பிப்பதாக இருந்தால் அதற்கு முன்பு தங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று 37 மனுதாரர்களும் கோரிக்கை விடுக்கலாம்.

    இரண்டாவதாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமோ அல்லது மத்திய சாலை போக்குவரத்து துறையோ சென்னை ஐகோர்ட்டின் ரத்து உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பு உள்ளது.

    மூன்றாவதாக இந்த திட்டத்துக்கு மத்திய அரசு உரிய விதிமுறைப்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்று, புதிய அறிவிப்பினை வெளியிட்டு திட்டத்தை தொடங்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. இதை மத்திய அரசு கையில் எடுக்க வாய்ப்பு உள்ளது.

    அதன்படி பொதுமக்களிடம் கருத்து கேட்டு மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க மத்திய அரசு முயற்சி செய்யும். இந்த 3 விதமான நடவடிக்கைகளே அடுத்தகட்ட நடவடிக்கையாக அமையும். #SalemChennaiGreenCorridor #8LaneRoad

    சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நாளை மறுநாள் ஐகோர்ட்டு பிறப்பிக்கிறது. #MadrasHC #ChennaiSalemExpressway
    சென்னை:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, தர்மபுரி எம்.பி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அதாவது இந்த வழக்கை கடந்த 8 மாதங்களாக நீதிபதிகள் விசாரித்தனர்.

    பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த ஜனவரி 4-ந்தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். #MadrasHC #ChennaiSalemExpressway 
    சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புகொடி போராட்டம் நடத்தினர். #chennaisalemexpressway

    சேலம்:

    சேலம்- சென்னை இடையே ரூ.10ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட அளவீடு பணி நடந்தது.

    அப்போது விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் நிலங்களை சாலைக்கு எடுக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

    இதையடுத்து ஐகோர்ட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதித்தது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி விவசாயிகளிடம் கருத்துக்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சாலைக்காக கையகப்படுத்தக்கூடிய நிலங்களின் விவரத்தை சர்வே எண்ணுடன் அரசு வெளியிட்டது. இதற்கு பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8- வழிச்சாலை அமைக்க நிலம் கொடுப்போரில் 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து விட்டனர். 11 சதவீத பேர் மட்டுமே எதிர்க்கின்றனர். அவர்களின் நிலத்திற்கும் உரிய இழப்பீட்டை வழங்கி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்,’ என்று தெரிவித்தார்.

    முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து, சேலம் பூலாவரியில் நேற்று மாலை பாதிக்கப்படும் விவசாயிகள் கறுப்பு கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    ராமசாமி என்பவரது தோட்டத்தில் திரண்ட விவசாயிகள், தென்னை மரங்களிலும், வருவாய்த்துறையினரால் நடப்பட்ட நில எடுப்பு எல்லை கற்களிலும் கறுப்பு கொடியை கட்டி நில எடுப்புக்கு அனுமதிக்க மாட்டோம் என கோ‌ஷமிட்டனர்.

    8 வழிச்சாலைக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக கூறுவது பொய். பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் 5 மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். புதிதாக விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #chennaisalemexpressway #farmersprotest

    சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #Edappaipalaniswami
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: காவிரி பிரச்சனை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையில் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி தற்போது உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மேகதாது பிரச்சனையில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை.


    கே: எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களே?

    பதில்: சேலம்-சென்னை 8 வழி பசுமைசாலைக்கு 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் உள்ளிட்ட யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது தமிழக அரசின் நோக்கம் இல்லை. ஒட்டுமொத்த பொது மக்களின் நலனுக்காகவும் இந்தியாவிலேயே இரண்டாவது பசுமை வழிச்சாலையான 8 வழி சாலை திட்டம் தமிழகத்திற்கு செயல்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழில் வளத்தில் தமிழகம் பெரிய அளவில் வளரும் வாய்ப்புள்ளது. எட்டு வழி சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தென்னை மரம், மா மரத்திற்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNCM #Edappaipalaniswami #greenexpressway
    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt #GreenwayRoad
    சென்னை:

    மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களில், சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. நிலஆர்ஜிதம் செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இத்திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், திட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரியும் தர்மபுரியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த ஜூலை மாதம் முதல் விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் சார்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956-ன் படி, திட்டத்திற்கான ஆரம்பகட்ட ஏரியல் சர்வே அடிப்படையிலேயே 3-ஏ என்ற அந்த அறிவிப்பாணைகள், கடந்த மே 10, 23, ஜூன் 1, 11, 21 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 8 வழி சாலை அமையும் இடங்களில், பொதுமக்கள் நலன் கருதி மாற்றியமைக்கப்பட்டது. இதனால், பல வீடுகள் இடிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. 3-ஏ பிரிவின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்பாணை என்பது, திட்டத்தை எங்கு செயல்படுத்த விரும்புகிறோம் என்ற விவரங்களை வெளியிடுவது தான். இந்த அறிவிப்பு என்பது, திட்டத்துக்கான நிலத்தை அதிகாரிகள் பார்வையிடவும், அளவிடவும் மட்டும்தானே தவிர, நிலத்தின் மீதான உரிமை எல்லாம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வழங்குவதற்காக இல்லை.

    மேலும், தீர்த்தமலை வனப்பகுதிக்குள் சாலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. புதிய அறிவிப்பாணையின்படி, தீர்த்தமலை வனப்பகுதியில் வெளிப்பகுதியை சுற்றி சாலை செல்வதுபோல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



    கடந்த செப்டம்பர் 4-ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, பிரிவு-3 டி-யின் கீழ் அறிவிப்பணையை வெளியிடவில்லை. இந்த பிரிவின் கீழ் அறிவிப்பாணை வெளியிடாத பட்சத்தில், நிலத்தின் உரிமையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை என்ற பேச்சே எழவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஏதாவது தாக்கல் செய்ய விரும்பினால், இருதரப்பு வக்கீல்களும் வருகிற ஜனவரி 4-ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். #ChennaiHighCourt #GreenwayRoad
    வழக்கு முடிந்ததும் 8 வழி சாலை பணிகள் தொடங்கும் என்று சேலத்தில் மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway

    சேலம்:

    சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை மெயின்ரோடு பிரிவில் சேகோசர்வ் எதிரில் ரூ. 22 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

    8 வழிச்சாலை அமைப்பதற்கு நாம் முயற்சித்தோம். அது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பல பேர் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய வழக்கு முடிந்த பிறகு அந்த பணிகள் தொடங்கும்.சில பேர் 8 வழிச்சாலை சேலத்திற்கு தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கின்றனர். சேலம் வழியாகத்தான் இந்த சாலை செல்கிறது அவ்வளவு தான்.

    இன்றைக்கு கோவையாக இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, கரூர், திண்டுக்கல், நாமக்கல்லாக இருந்தாலும் சரி சென்னைக்கு போக வேண்டும் என்றால் சேலம் வழியாகத்தான் போக வேண்டும். சேலத்துக்கு மட்டும் தான் 8 வழிச்சாலை என்று தவறான கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் சேலத்தில் இருக்கிறார். அதனால் தான் சேலத்திற்கு 8 வழிச்சாலை கொடுத்தார் என்று சொல்கிறார்கள். எனக்கென்ன 10 தொழிற்சாலையா? சேலத்தில் ஓடிக் கொண்டி ருக்கிறது. 8 வழிச்சாலை போடுவதற்கு. ஒரு தவறான கருத்தை வைத்து எதிர்க்கட்சிகள் எல்லாம் தவறான விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறது.

    நாளுக்கு நாள் வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. கனரக வாகனம் அதிகமாக போயிக் கொண்டு இருக்கின்றது. இதனால் சாலையின் தேவையும் அதிகரிக்கின்றது. புதிய சாலைகள் அமைக்க வேண்டும். சாலைகள் விரிவுபடுத்த வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள முடியும்.

    இந்த 8 வழிச்சாலை அமைக்கின்றபோது கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் மிச்சமாகும். இதனால் எரிபொருள் மிச்சமாகும். மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நேரமும் குறைகிறது. பயண நேரம் மிச்சமாகிறது. அதுமட்டுமல்ல அந்த சாலைகள் விபத்து இல்லாத சாலையாக தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும்.

    இப்படிப்பட்ட சாலையை அமைக்கப்படும்போது தான் புதிய புதிய தொழிற்சாலைகள் வரும். இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும். வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு தேவையான பொருளாதார வசதி கிடைக்கும்.

    இப்படிப்பட்ட ஒரு நலத்திட்டங்கள் வருகின்றபோது பொதுமக்கள் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்றால் தான் நம்முடைய நாடு முன்னுக்கு வர முடியும். வெளி நாடுகள் விரைவு சாலைகளால் தொழில் வளம் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். #GreenwayExpress #Thirumavalavan
    சென்னை:

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் யாவும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட நிலம் கையகப்படுத்தும் பணியை செய்து வந்தது. அதற்கு இப்போது சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.

    தமிழக அரசு இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது போல் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenwayExpress #Thirumavalavan
    சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GreenExpressway #HC
    சென்னை:

    சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு (8 வழிச்சாலை) நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.


    தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்றும் ஆனால் அரசு நடத்தவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #GreenExpressway
    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி மான்சுக் கூறினார். #ChennaiSalemGreenExpressway
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் தொடர்பாக சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று பேசினார்.

    பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா?, அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்திருக்கிறார்கள் அதன் விவரம் என்ன? இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.




    இதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி மான்சுக் பதில் அளித்து பேசினார்.

    அதன் விவரம் வருமாறு:-

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அவை அனைத்துமே காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழித்தலுக்கு எதிரானதுதான். திட்டத்துக்கு எதிரானது அல்ல.

    விவசாயிகள் தற்கொலை பற்றி இதுவரை எந்த தகவலும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை அமைக்கப்பட்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்து பேசினார்.  #ChennaiSalemGreenExpressway

    நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது போல் 8 வழிச்சாலை வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். #ChennaiSalemGreenExpressway
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த ஆண்டு நீட்தேர்வு பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசை கண்டித்தும், வன்முறையை தூண்டும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு அரியலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராவதற்காக கவுதமன் இன்று அரியலூர் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இதற்கான விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    மேலும் இயக்குனர் கவுதமன் மீதான 19 வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கிய சென்னை ஐகோர்ட்டு, அவர் அரியலூரில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. அதன்பேரில் அரியலூர் போலீஸ் நிலையத்தில் இன்று கையெழுத்திட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. அந்த வழக்குகளை நான் சட்டப்படி சந்திப்பேன். கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதில் ஏராளமான தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


    இந்த சோதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் இவ்வளவு ஊழல் நடந்துள்ளது போல் 8 வழிச்சாலை வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway #Gowthaman
    ×