என் மலர்

  நீங்கள் தேடியது "Namakkal Anjaneyar temple"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
  • 2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

  சென்னை:

  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்ம சுவாமி கோவில், அரங்கநாத சுவாமி கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

  இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சேகர்பாபு தெரிவித்ததாவது:-

  கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

  2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். திருப்பணிகள் தொடங்குவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

  அருகில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் ஆய்வு செய்தோம். இந்த கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சிதிலமடைந்த பழைய தல விருட்சக மரத்தின் பாகங்கள் கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நிகழ்ச்சியில் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் ரமேஷ், கோவில் உதவி ஆணையர் இளையராஜா, கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஞ்சநேயருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினந்தோறும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

  அதன்படி நேற்று ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பலியான அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
  சென்னை:

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  நாமக்கல் மாவட்டம், ஆஞ்சநேயர் கோயிலில், 27.1.2019 அன்று கைங்கர்யப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை பிரதான சாலையைச் சேர்ந்த வெங்கடேசன் கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

  கைங்கர்யப்பணியின் போது, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வெங்கடேசன் குடும்ப நிலையினைக் கருத்திற்கொண்டு, சிறப்பினமாக அவருடைய குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் பலகையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  நாமக்கல்:

  நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் சேலம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலை அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறை நாளான நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வந்தார். இங்கு சுமார் 8 அடி உயரத்தில் பலகையில் நின்று கொண்டு ஆஞ்சநேயருக்கு மலர் மாலை அணிவித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பலகையில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

  இதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தலையில் பலத்த காயமடைந்த அவரை சக அர்ச்சகர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதற்கிடையே கோவில் கருவறைக்குள் வெங்கடேசன் தவறி விழுந்ததால், நேற்று ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் தூய்மை செய்யப்பட்டு, அர்ச்சகர்கள் மூலம் கலசங்கள் வைத்து பரிகார பூஜை செய்யப்பட்டது. பின்னர் புண்ணியாவாசனம் நடந்தது. இதையடுத்து தினசரி நடைபெறும் பூஜைகள் தொடங்கியது. பக்தர்களும் சாமியை வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். #NamakkalAnjaneyar #HanumanJayanti
  நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

  இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தார்கள்.

  அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவது போல் பிரமாண்டமான மலர் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. சுமார் ரூ. 3.5 லட்சம் செலவில் 1½ டன் எடையுள்ள ரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.  இதேபோல் சாமிக்கு இடது புறம் மற்றும் வலது புறத்தில் யானை உருவத்தை மலர்களால் அலங்காரம் செய்து இருந்தனர். இது மிகவும் தத்ரூபமாக இருந்தது.

  அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

  அதன்படி நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கோவை உள்ளிட்ட மார்க்கமாக செல்லும் பஸ்கள் மணிக்கூண்டில் இருந்து பரமத்தி சாலை வழியாக வள்ளிபுரம் பை-பாஸ் சென்று, அங்கிருந்து நல்லிபாளையம் பை-பாஸ் வழியாக சென்றது.

  நகருக்குள் வரும் பஸ்கள் வழக்கமான மார்க்கத்தில் வந்து சென்றன. கோட்டை சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. #NamakkalAnjaneyar #HanumanJayanti
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

  மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

  கோவில் வரலாறு

  ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

  அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.

  தல பெருமைகள்

  இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண் டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம். தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

  எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதி யில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.
  இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார். மிக பிரம் மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.

  வடைமாலை நேர்த்திக் கடன்

  முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடு படுகிறார்கள் என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
  கோபுரம் இல்லை

  லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

  தங்க ரதம்

  இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுத்து வழிபட்டு வருகிறார்கள்.

  108 தங்க மலர் அர்ச்சனை செய்வதற்கு கட்டணம் ரூ. 250 ஆகும். இந்த அர்ச்சனை செய்யும் நேரம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை.
  மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9.00மணி வரை
  ஒரு கட்டண சீட்டுக்கு அதிகபட்சமாக 5 பெயர்கள் (ராசி, நட்சத்திரம் அர்ச்சனை செய்யப்படும்)

  அன்னதானம்

  தமிழக முதல்- அமைச்சரின் திருக்கோவில் அன்னதானத் திட்டம் மூலம் தினமும் இக்கோவிலில் 125 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

  தங்கத்தேர் கட்டணம்

  நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைக்குரிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விபரம் வருமாறு:- அன்னதானம் 100 நபர்களுக்கு வழங்க கட்டணம் ரூ.2500, ஆஞ்சநேயர் வடைமாலை அபிஷேக கட்டணம் (1 பங்கு) ரூ.6000, தங்கத்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.2000, வெள்ளி கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.750, தங்க கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.5000, முத்தங்கி சாத்துபடி கட்டணம் ரூ.3000, திருக்கல்யாண உற்சவ கட்டணம் ரூ.2500, வெண்ணெய் காப்பு (1 பங்கு கட்டணம் ரூ.15000 வீதம் 5 பங்கு கட்டணம்) ரூ.75000, 108 தங்கமலர் அர்ச்சனை கட்டணம் ரூ.250, ஸ்ரீசுத்த பாராயணம் ரூ.250 ஆகும்.

  பிரார்த்தனை சீட்டு மூலம் கோரிக்கை நிறைவேறும்

  மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் “ஸ்ரீஆஞ்சநேயா போற்றி” என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

  முக்கிய திருவிழாக்கள்

  நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலோடு இணைந்து ஆஞ்சநேயர் கோவில் இருப்பதால் இந்த கோவில்களுக்கு திருவிழாக்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது. முக்கிய திருவிழாக்கள் வருமாறு:-

  தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
  தெலுங்கு வருடப் பிறப்பு
  வைகாசி விசாகம் (ஏப்ரல் - மே)
  ஆடி 18 (ஆகஸ்டு)
  ஆடி பூரம் - ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை
  ஆவணி பவுத்திர உற்சவம் (செப்டம்பர்)
  ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டம்பர்)
  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் - அக்டோபர்)
  புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்டம்பர் - அக்டோபர்)
  நவராத்திரி உற்சவம் (அக்டோபர்)
  விஜயதசமி
  திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)
  அனுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை)
  மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்
  வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)
  அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)
  வருட உற்சவம் (பங்குனி)
  அஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது 15 நாட்கள் திருவிழாவாகும். மூன்றாம் நாள் திருத் தேர் உலா நடைபெறும்.

  பஸ்-ரெயில் வசதிகள்

  நாமகிரி என்ற சிறப்புமிக்க நாமக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் வீற்றிருக்கிறது. நாமக்கல் ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

  நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம். சேலத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி நடந்து கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் டவுன் பஸ்சில் டிரைவர் பஸ்சை நிறுத்தினால் கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம். இல்லை என்றால் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில்தான் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர முடியும். இக்கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளன.

  தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. இக்கோவில் சேலத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

  இந்த கோவிலுக்கு முக்கிய நகரங்களில் இருந்து ரெயில் மூலமும் வரலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் பாசஞ்சர் ரெயிலும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
  ×