search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து- அமைச்சர் சேகர்பாபு தகவல்
    X

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    • கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
    • 2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்ம சுவாமி கோவில், அரங்கநாத சுவாமி கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சேகர்பாபு தெரிவித்ததாவது:-

    கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். திருப்பணிகள் தொடங்குவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

    அருகில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் ஆய்வு செய்தோம். இந்த கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சிதிலமடைந்த பழைய தல விருட்சக மரத்தின் பாகங்கள் கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் ரமேஷ், கோவில் உதவி ஆணையர் இளையராஜா, கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×