search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Sivanthi Aditanar"

    • வாசுதேவநல்லூர் அருகே ராயகிரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    வாசுதேவநல்லூர்:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராயகிரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    இந்து நாடார் உறவின்முறை செயலாளர் சண்முகானந்தன் தலைமை தாங்கினார். இந்து நாடார் உறவின்முறை பள்ளி கமிட்டி உப தலைவர் காளியப்பன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாநகர தலைவர் பாக்யராஜ், செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார்.

    நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் ராயகிரி அய்யாசாமி, நெல்லை மாநகர துணை தலைவர் ஜோசப்ராஜ், துணை செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் சரத் கண்ணன், சண்முகராஜ், ராஜேஷ், தமிழ் ஆசிரியர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காமராஜர் ஆங்கிலப்பள்ளி செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    இதேபோல் டி.ராமநாதபுரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் செல்லக்கனி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பசுபதி தனராஜ் நன்றி கூறினார்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். #DrSivanthiAditanarMemorial

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     


    தினத்தந்தி, தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். #DrSivanthiAditanarMemorial

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #SivanthiAditanar #Manimandapam
    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் சிவந்தி அகாடமி வளாகத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

    இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நடந்தது. சென்னையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

    படிக்காத பாமரர்களுக்கும் ‘தந்தி’ பத்திரிகை மூலம் தமிழ் கற்று கொடுத்து படிக்க வைத்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். அவரது வழியில் அவருடைய மைந்தர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மூலம் தமிழக மக்களுக்கு பெரும் தொண்டாற்றினார். மேலும் அவர் கல்வி, விளையாட்டு, ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினார்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக திறம்பட பணியாற்றினார். அவர் எண்ணற்ற கோவில்களில் திருப்பணிகளை நடத்தினார். அவர் ஏழை எளிய மக்களுக்கு கொடை வள்ளலாக திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.



    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியவுடன் மழைக்காலம் தொடங்கியது. திருச்செந்தூர் கடலோரத்தில் இருப்பதால் நிலத்தடி நீர் கசிவு இருந்தது. எனவே தற்போது பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 2 மாதங்களில் மணிமண்டப கட்டுமான பணிகள் நிறைவு பெறும். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #SivanthiAditanar #Manimandapam
    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.11.2017 அன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அந்த விழாவில், ‘‘தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-19-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது.

    இதைத்தொடர்ந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.



    அதேநேரத்தில் திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    புழலில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி மற்றும் ஸ்ரீநல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. #SivanthiAditanar
    செங்குன்றம்:

    புழலில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி மற்றும் ஸ்ரீநல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் சார்பாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து முன்னிலை வகித்தார்.

    விழாவில் பங்கேற்றவர்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் துணைத்தலைவர்கள் எல்.தாமஸ், எம்.ஏ.திரவியம், கரு.சி.சின்னதுரை, சங்க செயலாளர் எஸ்.செல்லதுரை, கல்வி குழு உறுப்பினர்கள் எஸ்.பி.ரத்தனசாமி மற்றும் மீஞ்சூர், செங்குன்றம், அம்பத்தூர் நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள்.

    கல்லூரி செயலாளரும், பள்ளி நிர்வாக இயக்குனருமான எஸ்.கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் மார்க்ரெட்ஜெஷி, பள்ளி முதல்வர் குளோரிஷீலா, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #SivanthiAditanar

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #SivanthiAditanar
    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், த.மா.கா. மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், டாக்டர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.சி. கடலூர் எல்.ஜெயச்சந்திரன், தண்டு பத்து ஜெயராமன், முல்லை ராமராஜன், காயாமொழி முருகன் ஆதித்தன்.



    சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனக ராஜ், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனரும் இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜ்குமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கவிஞர் காசி முத்துமாணிக்கம், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், சிம்லா முத்துச்சோழன்.

    காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமசந்திரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், டி.நகர் பகுதி தலைவர் நாச்சிகுளம் சரவணன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் தோப்பு மணி, மாநில நிர்வாகக் குழு இயக்குனர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர், தென்காசி ஆல்பா பீர்முகமது, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லைராஜா, தொழில் அதிபர் முல்லை பிரைசன், வடசென்னை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் ஜி.ராபர்ட், ஆர்.கே.நகர் நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி.

    அசோக்நகர் கிளை செயலாளர் பொன். அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, அணியாபூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் செல்வம், சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுக் குழு தலைவர் சாமிநாதன், செயலாளர் சீனிவாசன்.

    பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரெங்கசாமி, தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொதுச்செயலாளர் மாரிதங்கம், மாநில துணை தலைவர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், செயலாளர் தங்கதுரை, மாடசாமி, தென்சென்னை மாவட்ட தலைவர் இம்மானுவேல், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர், வடசென்னை இளைஞர் அணி தலைவர் கனகராஜன், தயானஷ், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் காளிதாஸ், பொதுச் செயலாளர் தனம் என்ற ராமச்சந்திரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அ.முத்துக்குமார், எழில் நகர் நாடார் சங்க தலைவர் மாடசாமி, அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் தலைவர் தங்கபெரு மாள், ஆர்.கே.நகர் ஆதித்தனார் முரசு கணேசா.

    நந்தம்பாக்கம் நாடார் சங்க தலைவர் ஆர்.வி.கணேசன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் லட்சுமணன், துணை தலைவர் தங்கராஜ், துணை செயலாளர் ஆர்.ஏ.கதிரேசன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரே சன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் பூபாண்டியன், பால்ராஜ், தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாநில இளைஞர் அணி தலைவர் விஜயகுமார், உமரிசங்கர், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் சண்முக பாலாஜி, தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா. #SivanthiAditanar
    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.1.34 கோடி அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #SivanthiAditanar
    சென்னை:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறையின் செயலாளர் இரா.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்- அமைச்சர், “திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைப்பதற்காக உரிய இடத்தை தேர்வு செய்து அறிக்கை அனுப்பும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடப்பட்டது.

    இந்த மணிமண்டபம் அமைப்பதற்கான வரைபடத்துடன் கூடிய 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான திட்ட மதிப்பீட்டை மாவட்ட கலெக் டரின் மேலொப்பத்துடன் அனுப்புமாறும், முதல்- அமைச்சரின் ஒப்புதல் பெற ஏதுவாக, 5 மாதிரி வரைபடங்களையும் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளரிடம் (கட்டிடங்கள்) கேட்கப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டணம் 0.93.0 ஏர்ஸ் நிலத்தில், 60 செண்ட் நிலத்தை தேர்வு செய்து அந்த இடத்துக் கான புலத்தணிக்கை அறிக்கையை 24.3.2018 அன்று அரசுக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பிவைத்தார்.

    பொதுப்பணித்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் மொத்த பரப்பு 342.22 சதுர மீட்டரில் (78.41 சதுரமீட்டரில் மணிமண்டபம், 263.81 சதுர மீட்டரில் நூலகம், ஆண்கள் மற்றும் மகளிர் கழிப்பறை) மணிமண்டபம் அமைக்க ஏதுவாக ரூ.1.50 கோடிக்கான தோராய திட்ட மதிப்பீட்டை (சிலை அமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு) அரசுக்கு அனுப்பி வைத்து, அந்த தோராய திட்ட மதிப்பீட்டுக்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கும்படி கோரியுள்ளார்.



    அரசின் கவனமான பரிசீலனைக்கு பிறகு, முதல்-அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டரின் அறிக்கை மற்றும் முதன்மை தலைமைப் பொறியாளரின் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், மேற்கூறப்பட்ட இடத்தில் 342.22 சதுர மீட்டரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

    மணிமண்டபம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடுகளில் அரசின் முன் அனுமதியின்றி எந்த வித மாற்றங்களும் மேற்கொள்ளக்கூடாது என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனருக்கு முழுமையான பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பி வைக்கும்படியும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) அறிவுறுத்தப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டதும், அதற்கான இடம் தேடும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  #SivanthiAditanar
    ×