search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் உத்தரவு
    X

    பல்வேறு சம்பவங்களில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் உத்தரவு

    பல்வேறு சம்பவங்களில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ரகுராமன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிர்மலா மற்றும் அவரது மகன் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துமாடனின் மகன் காசி, மகள் ஆனந்தி இருவரும் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.

    திருவாரூர் திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ரோகித், பாலாஜி ஆகிய இருவரும் பாண்டவையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கியும், மதுரை கிழக்கு மதுரை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் முத்து வீரகணபதி மற்றும் வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அருண்குமார் ஆகியோர் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    விபத்துக்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×