என் மலர்
செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18-ந் தேதி திருச்செங்கோடு வருகை
திருச்செங்கோட்டில் வருகிற 18-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். #Edappadipalanisamy
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருகிற 18-ந் தேதி அன்று பள்ளிபாளையம், குமார பாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு வருகை தர உள்ளார்.
அதற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். #Edappadipalanisamy
Next Story






