search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai super kings"

    • சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் , ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 4 போட்டியில் ஒன்றில் வெற்றி (மும்பை 20 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் ( டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் கடந்த 1-ந் தேதி நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு சி.எஸ்.கே. பழிவாங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழைய எஞ்சிய 4 ஆட்டங்களும் முக்கியமானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த ஆட்டத்தில் டக்அவுட் ஆனதால் அணி போதுமான ரன்களை குவிக்கவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 509 ரன் குவித்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.

    நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது. 5 பவுலர்கள் ஆடவில்லை.

    14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காளதேசம் திரும்பியுள்ளார். பதிரனா, தீக் ஷனா உலக கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கை சென்றுள்ளனர். தீபக் சாஹர் காயத்தில் உள்ளார். துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இது சி.எஸ்.கே.வுக்கு பாதிப்பே. நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் முழுமையான மாற்றம் இருக்கும்.

    பஞ்சாப் கிங்ஸ் 4 வெற்றி , 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோ, ஷசாங்சிங், பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங், கேப்டன் சாம் கரண், ரபடா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும். இதுவரை நடந்த 29 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15-ல், பஞ்சாப் கிங்ஸ் 14-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.
    • உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்கள் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் ஆகிய அணிகள் உள்ளன. இந்த புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி 5 தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணிக்கு பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்து வீச்சு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. முஸ்தஃபிசுர் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் வெற்றி பெற போட்டியில் கூட சென்னை அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

    சிஎஸ்கே அணிக்கு பந்து வீச்சுக்கு பக்க பலமாக இருந்த வங்காள தேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் சிஎஸ்கே அணியில் இருந்து விடை பெற்றார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.

    இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் எல்லாவற்றுக்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களது மதிப்புமிக்க அறிவுரைகளுக்கு நன்றி.

    அவற்றை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்களை மீண்டும் சந்திக்கவும், மீண்டும் உங்களுடன் சேர்ந்து விளையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    • பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார். 

    • ஐதராபாத் அணிக்கு ஏய்டன் மார்க்ரம் 32 ரன்களை குவித்தார்.
    • தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

    டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    213 ரன்களை துரத்திய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா முறையே 13 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

    இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் நிதானமாக ஆடினார். இவர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதிஷ் குமார், கிளாசன் முறையே 15 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்தது.

    இதன் காரணமாக ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை சார்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளையும், பத்திரனா மற்றும் முஸ்தாஃபிசுர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர்.
    • புவனேஷ்வர் குமார் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில்பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெறும் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

    டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சென்னை அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஐதராபாத் அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெறும் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஐதராபாத் அணி எட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணியும், தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஐதராபாத் அணியும் களமிறங்குகிறது. 

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார்
    • அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும்

    இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த டோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.

    ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று டோனி நேரடியாக கூறிவிட்டதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

    ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். அதனால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி டோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஸ்டோய்னிஸ் 124 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ருதுராஜ் களமிறங்கினர். ரகானே முதல் ஓவரிலேயே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ருதுராஜ் - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். அதிரடி காட்டிய துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரரான டிகாக் 3 பந்துகள் சந்தித்து 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேஎல் ராகுல் 16 ரன்னிலும் படிக்கல் 13 ரன்னிலும் வெளியேறினர்.

    அந்த நேரத்தில் ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினர். குறிப்பாக ஷர்துல் தாகூர் வீசிய 16-வது ஓவரில் பூரன் 2 சிக்சர் 1 பவுண்டரி என 17 ரன்கள் குவித்தார். சென்னை அணிக்கு பயத்தை காட்டிய பூரனை (15 பந்தில் 34 ரன்கள்) பத்திரனா வீழ்த்தினார்.

    கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்ற ஸ்டோய்னிஸ் நான்கு பந்துகளில் 18 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஸ்டோய்னிஸ் 124 ரன்னிலும் தீபக் ஹூடா 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார்.
    • மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய சென்னை அணிக்கு அஜிங்க்யா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    போட்டி முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களையும், துபே 27 பந்துகளில் 66 ரன்களை குவித்தனர். லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சென்னை அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.
    • லக்னோ அணி இதுவரை மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை சென்னை அணி விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. லக்னோ அணியும் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது.

    சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    லக்னோ அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பாதையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
    • இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தேதி அறிவிகப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்தில் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3, 4, 5-வது இடங்கள் முறையே சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி காலை 10:40 மணிக்கு தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது.
    • இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் சந்தித்து புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தடுமாறுவதற்கு காரணம், யாக்கர் பந்துகளை தங்களால் வீச முடியாது என நினைத்து, தங்களை ஏமாற்றிக் கொள்வதால்தான். அதனால்தான் சிஎஸ்கேவில் பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு பவுலர்களையும் 12 - 14 யாக்கர் பந்துகளை வீசச் சொல்லுவேன்.

    யார்க்கர் வீசாமல் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்களான லசித் மலிங்கா, பும்ரா அல்லது பத்திரனா, நான் விளையாடியபோது நானே, இதேபோன்ற திட்டத்தை நாங்கள் கொண்டிருந்தோம். முடிந்தவரை அதிக யார்க்கர்களை வீச முயற்சி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×