search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.எஸ்.கே"

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார்
    • அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும்

    இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த டோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.

    ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று டோனி நேரடியாக கூறிவிட்டதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

    ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். அதனால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி டோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம்
    • சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ஏற்கனவே ராயுடுவின் ட்வீட் குறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். இதுகுறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், 'ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்' என கூறினார்.
    இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 
    அவர் கூறுகையில், ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
    ×