search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல்.-ல் தொடர்வாரா தோனி? - சென்னை அணியிடம் கூறியது என்ன?
    X

    ஐ.பி.எல்.-ல் தொடர்வாரா தோனி? - சென்னை அணியிடம் கூறியது என்ன?

    • நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார்.
    • ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.

    நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    போட்டி முடிந்து தோனி விராட் கோலிக்கு கை குழுக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் தோனிக்கு இதுதான் ஐபிஎல் போட்டியில் கடைசியாக விளையாடுவது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

    அதனால் நாம் தோனியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் . ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×