என் மலர்
நீங்கள் தேடியது "CSKvsLSG"
- 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
- சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும்.
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) கண்டுள்ளது. சொந்த மண்ணில் கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய கையோடு லக்னோ அணி களம் இறங்குகிறது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (4 அரைசதத்துடன் 349 ரன்கள்) சூப்பர் பார்மில் இருக்கிறார். மிட்செல் மார்ஷ், மார்க்ரம், ஆயுஷ் பதோனியும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். இதுவரை 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரிஷப் பண்ட் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள்.
5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் அடுத்தடுத்து தோற்று கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி இதுவரை 18 வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது. இருப்பினும் அவர்களால் இன்னும் சரியான கலவையை கண்டறிய முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மெச்சும் வகையில் இல்லை.
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்துக்கு முன்னதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி தொடரில் இருந்து விலகினார். கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார். இருப்பினும் அந்த ஆட்டத்திலும் சென்னைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் நடந்த அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்னில் முடங்கியது. ஷிவம் துபே (31 ரன்), விஜய் சங்கர் (29 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தங்களது எஞ்சி 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். இதனால் சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் லக்னோ அணி தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் வலுவான லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சென்னை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3 ஆட்டங்களில் லக்னோவும், ஒரு ஆட்டத்தில் சென்னையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ் அல்லது ஹிமாத் சிங், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி.
சென்னை: டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
- லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரின் 30-வது ஆட்டமாகும்.
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் 27 லீக் ஆட்டங்கள் முடிந்தன.
ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளி களுடன் கடைசி இடத்தில் உள்ளது
சேப்பாக்கம் மைதா னத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற் கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி.யிடம் (சேப்பாக்கம்) 50 ரன்னிலும், ராஜஸ்தானிடம் (கவுகாத்தி) 6 ரன்னிலும், டெல்லி கேப்பிட்டல்சிடம் ( சேப்பாக்கம்) 25 ரன்னிலும், பஞ்சாப்பிடம் (நியூ சண்டி கர்) 18 ரன்னிலும், கொல் கத்தாவிடம் (சேப்பாக்கம்) 8 விக்கெட் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக தோற்றது.
லக்னோவுடன் நாளை மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரின் 30-வது ஆட்டமாகும்.
தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்கே. அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானது. 2-வது வெற்றிக்காக நீண்ட நாட் களாக காத்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாக இருக்கிறது. டோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 103 ரன்னில் சுருண்டு மிகவும் பரிதாபமாக தோற்றது.
எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே ஏனென் றால் சி.எஸ்.கே. வீரர்கள் ஆட்டம் படுகேவலமாக இருக்கிறது.
ரிஷப்பண்ட் தலைமை யிலான லக்னோ 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி ஆர்வத்தில் இருக் கிறது.
நிக்கோலஸ் பூரன், மிச்சேல் மார்ஷ், மர்சிராம், திக்வேஷ், ரவி பிஷ்னோய் லக்னோ அணியில் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
- சென்னை அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.
- லக்னோ அணி இதுவரை மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதுவரை சென்னை அணி விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. லக்னோ அணியும் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்விகளை தழுவியுள்ளது.
சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
லக்னோ அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பாதையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறது.
- ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார்.
- மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை துவங்கிய சென்னை அணிக்கு அஜிங்க்யா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
போட்டி முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களையும், துபே 27 பந்துகளில் 66 ரன்களை குவித்தனர். லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






