search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction"

    • திருவாரூர் ஒழுங்குமுறை விறபனை கூடத்தில் பருத்தி ஏலம் நடை பெற்றது.
    • ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,059க்கு ஏலம் போனது.

     திருவாரூர்:

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர்.

    இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.

    இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

    இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 59 -க்கு ஏலம் போனது.

    குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 209 விலையும் கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 612-க்கு விற்பனையானது.

    • ஏல விற்பனை சொத்துகளை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
    • இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த வக்கீல் செந்தில் குமாரையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    பல்வேறு சூழ்நிலைகளால் ஒரு நபரின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு அந்த சொத்துக்கள் கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு, வருவாய்துறை மூலம் ஏலம் விடப்படுகிறது.

    அவ்வாறு, ஏலம் விடப் படும் போது ஏலத்தில் கலந்து கொண்டு சொத்துக் களை வாங்கும் நபர், ஏலத் தில் வாங்கிய விற்பனை சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    தற்போது விற்பனைச் சான்றிதழை பதிவு செய்யும் போது சொத்தின் சந்தை மதிப்பில் 11 சதவீதத்தை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என பதிவுத்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அரசானை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதி ரானது.

    இதனால், ஏலத்தில் சொத்து வாங்கியவர் கூடு தல் நிதி சுமை ஏற்படும். எனவே, இந்த அரசாணை யை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந் தது.

    அப்போது இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் பிறப் பித்த இடைக்கால தடையை நீடித்து, வழக்கை 4 வாரங் களுக்கு ஒத்திவைத்தனர்.

    • மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

    விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏராளமானவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தவர்கள் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்ப படிவம் மூலம் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் வழங்கிய போது 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் மூலம் ரூ.1.370 கோடி வசூலானது. கடை உரிமை கட்டணம் மூலம் ரூ.3,500 கோடி வருவாய் கிடைத்தது.

    தற்போது தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் 615 கடைகள் உள்ளது. ஐ.டி கார்டரில் உள்ள செரிலிங்கம், விமான நிலையம் அமைந்துள்ள ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள கடைகளுக்கு கடும் கிராக்கி நிலவியது.

    சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் ரூ.2,639 கோடி அள்ளியுள்ளனர்.

    • குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 99-க்கும் விலை போனது.
    • ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.76 கோடி ஆகும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் பிரியாமாலினி தலைமையில் நடந்த ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் 2 ஆயிரத்து 400 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.

    கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 689-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 99-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.76 கோடி என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.
    • ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, மேலாளர் சண்முகராஜா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர்.

    காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.இதில் வியாபாரிகள் கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் 14 கடைகளும், தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளும், தலா ரூ. 11ஆயிரம் முதல் 11.500 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டது.

    இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நகராட்சி பிடித்துசென்ற மாடுகள் நாளை ஏலம் விடப்படுகிறது.
    • மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்

    கீழக்கரை

    கீழக்கரையில் பொது மக்களுக்கு இடையூறாக பராமரிப்பின்றி சுற்றித்தி ரியும் மாடுகளை பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கீழக்கரையில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். அவை நகராட்சி அலுவலகம் அருகே தனியார் இடத்தில் அடைக்கப் பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அனுமதி இன்றி மாடுகள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இது அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதை யடுத்து மாடுகளை பாது காப்பதற்கு நியமிக்கப்பட்ட முருகேசன் என்பவர் நகராட்சி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் நாளை (10-ந் தேதி) காலை 11 மணிக்கு அந்த மாடுகள் ஏலம்விடப் படவுள்ளன. ஒரு மாட்டிற்கு ஏலத் தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப் பட்டது. இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறியதாவது:

    ஏலத்திற்கான காப்புத் தொகையினை குறித்த காலத்திற்குள் டிமாண்ட் டிராப்டாக ஆணையாளர் கீழக்கரை நகராட்சி என்ற பெயரில் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்திற்கான காப்பு தொகை செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள். ஏலத்தின் போது ஆணை யாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஒவ்வொரு மாட்டிற்கான ஆரம்ப ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்படும்.

    இதற்காக பல்வேறு நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இதே போல் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது.

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், சேலம் விற்பனைக்குழு, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது. மேலும் மஞ்சள், நிலகடலை ஆகிய விளைப்பொருளுக்கும் மறைமுக ஏலம் நடத்தப்பட உள்ளது.உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்வதால், விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை தரம் பிரித்து, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து, ஏலத்தில் விற்பனை செய்தால் தரத்திற்குரிய விலை கிடைக்கும்.ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளிடம் எந்தவித கமிஷன் (தரகு) பிடித்தமும் செய்வதில்லை. விற்பனை செய்த முழுத்தொகையும் பெறலாம். எனவே, விவசாயிகள் மேற்படி மறைமுக ஏலத்திற்கு விளைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை,

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ 21.58 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது

    வேலாயுதம் பாளையம்,

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்நடந்த ஏலத்தில் 59.78½ குவிண்டால் எடை கொண்ட 17 ஆயிரத்து 499 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.36-க்கும், சராசரி விலையாக ரூ.23.50-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து35ஆயிரத்து 831-க்கு விற்பனையானது.அதேபோல் 275.59 ½ குவிண்டால் எடை கொண்ட 575-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.55-க்கும், சராசரி விலையாக ரூ.79.19-க்கும் விற்பனையானது.2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.91-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.30-க்கும், சராசரி விலையாக ரூ.71.60-க்கும் என மொத்தம் ரூ.20லட்சத்து22ஆயிரத்து 250-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.21லட்சத்து58 ஆயிரத்து 081-க்கு விற்பனையானது.

    • மொத்தம் 51 வாகனங்கள் வரும் ஜூலை 25ந் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
    • மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் இந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஜூலை 25 ந் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்ட்ட 34 இருசக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் வரும் ஜூலை 25ந் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

    திருப்பூரை அடுத்த அவிநாசி மடத்துப்பாளையம் சாலையில் சிவகுமாா் ரைஸ் மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் இந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. ஆகவே, மேற்கண்ட ஏலத்தில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்து ரூ.46 லட்சத்துக்கு ஏலம் போனது
    • 336 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், சேலம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 657-க்கு விலை போனது. குறைந்த பட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 869-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 419-க்கும் விலை போனது.

    மறைமுக ஏலத்தில் மொத்தம் 734.92 குவிண்டால் பருத்தி 336 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.46 லட்சத்து 17 ஆயிரத்து 629-க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.
    • ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது.

    உலகம் முழுவதும் பலகோடி சிறுவர்-சிறுமிகளின் ஆதர்ஷ நாயகனான ஹாரிபாட்டரை பற்றிய புத்தகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஜோன் ரவ்லிங் என்ற ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் எழுத தொடங்கிய மந்திர, தந்திர கதைகள் ஹாரிபாட்டர் என்ற டீன் ஏஜ் சிறுவனை நாயகனாக வடிவமைத்து எழுதப்பட்டவை ஆகும்.1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.

    லேமினேட் செய்யப்பட்ட அட்டையுடன் கூடிய இந்த புத்தகம் சமீபத்தில் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இந்த புத்தகம் முதல் பதிப்பு 500 புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட 300 புத்தகங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி உள்ளது.

    ×