பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம்

காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.
ஏலம் நடைபெற்ற காட்சி.
ஏலம் நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம்:

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, மேலாளர் சண்முகராஜா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர்.

காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.இதில் வியாபாரிகள் கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் 14 கடைகளும், தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளும், தலா ரூ. 11ஆயிரம் முதல் 11.500 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டது.

இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com