search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி பிடித்துசென்ற மாடுகள் நாளை ஏலம்
    X

    நகராட்சி பிடித்துசென்ற மாடுகள் நாளை ஏலம்

    • நகராட்சி பிடித்துசென்ற மாடுகள் நாளை ஏலம் விடப்படுகிறது.
    • மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்

    கீழக்கரை

    கீழக்கரையில் பொது மக்களுக்கு இடையூறாக பராமரிப்பின்றி சுற்றித்தி ரியும் மாடுகளை பிடித்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கீழக்கரையில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். அவை நகராட்சி அலுவலகம் அருகே தனியார் இடத்தில் அடைக்கப் பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அனுமதி இன்றி மாடுகள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இது அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதை யடுத்து மாடுகளை பாது காப்பதற்கு நியமிக்கப்பட்ட முருகேசன் என்பவர் நகராட்சி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் நாளை (10-ந் தேதி) காலை 11 மணிக்கு அந்த மாடுகள் ஏலம்விடப் படவுள்ளன. ஒரு மாட்டிற்கு ஏலத் தொகையாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப் பட்டது. இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், தலைவர் செஹனாஸ் ஆபிதா கூறியதாவது:

    ஏலத்திற்கான காப்புத் தொகையினை குறித்த காலத்திற்குள் டிமாண்ட் டிராப்டாக ஆணையாளர் கீழக்கரை நகராட்சி என்ற பெயரில் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏலத்திற்கான காப்பு தொகை செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனும திக்கப்படுவார்கள். ஏலத்தின் போது ஆணை யாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஒவ்வொரு மாட்டிற்கான ஆரம்ப ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்படும்.

    இதற்காக பல்வேறு நிபந்த னைகள் விதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் இதே போல் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×