search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advice"

    • விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்காக தமிழகத்தில் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த 20-ந் தேதி 850 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தஞ்சை மாவட்டத்தில் இன்று 880 மையங்களில் தொடங்கியது.

    இந்த நிலையில் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சை தாலுகாவில் முகாம் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தாசில்தார் சக்திவேலுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து முகாம் நடைபெறும் இடத்தில் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அலுவலர்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தே திடீரென போன் செய்தார். முகாமுக்கு சென்று விட்டீர்களா ? நீங்கள் பணிபுரியும் முகாமில் எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று விண்ணப்பம் பதிவு செய்யப்படும்? குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை மேலே வீதியில் விண்ணப்பம் பதிவு முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார். முகாமில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    மாவட்டம் முழுவதும் இன்று தொடங்கியுள்ள முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமில்

    குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது ,வங்கி பாஸ் புத்தகம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முகாம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக 333 ரேஷன் கடைகளில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதா ரர்களிடமும் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை விண்ணப்பம் , டோக்கன் வினியோகம் செய்யப்படும். தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறும்.

    • ஊராட்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,

    பொது மக்களிடம் வரி வசூல் செய்யும் போது ரொக்கமாக பெறாமல் ஆன்-லைன் முறையில் வசூல் செய்ய வேண்டும். தனிநபர் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் தாமதம் இன்றி விரைவில் முடிக்க வேண்டும்.குளங்கள் சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டும் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திற்குள் முடிக்க வேண்டும், என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், மண்டபம் பி.டி.ஓ., க்கள் முரளிதரன், நடராஜன், பங்கேற்றனர்.

    • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன திட்டம் பயன் குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடைபெற்றது
    • ரூ.4.00 கோடிக்கான கடன் அனுமதி

    கரூர்,

    யூகோ வங்கிகடந்த 30-ம் தேதி அன்று, கரூர் மாநகரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சென்றடைதல் திட்டத்தை நடத்தியது.இக்கூட்டத்தில் யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர்ஜி.ஜோதிஷ் மற்றும் யூகோ வங்கியின் கோவை எஸ்எம்இ-ஹப் தலைவர் ராம் பிரகாஷ் மிஸ்ரா, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.எஸ் சங்கரலிங்கம் மற்றும் கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அன்போலி ஆர். காளியப்பன் மற்றும் ஸ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தின் தலைமை வழிகாட்டியான, பி.அசோக் சங்கர், இயக்குநர் கிசின் டெக் ஆகியோர் கலந்து கொண்டனர்.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வளர்ச்சியில் வங்கியின் பங்கு பற்றி பங்கேற்பாளர்களிடம் உரையாற்றினர்.ஏற்றுமதி துறை தொழில் முனைவோர் மற்றும் யூகோ வங்கி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். கிளை மேலாளர்கே.வினோத் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பிரிவுகளுக்கு இருக்கும் பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கினார். பங்கேற்பாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.மண்டல மேலாளர்ஜி.ஜோதிஷ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4.00 கோடிக்கான கடன் அனுமதி கடிதங்களை வழங்கினார்.

    • போலீஸ் பணியில் சேர்ந்து விட்டதால், உங்களுக்குள் இருக்கும் தனித்திறைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    • நூலகம், உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றையும் ஐ.ஜி., தமிழ் சந்திரன் பார்வையிட்டார்.

    கோவை,

    கோவை போலீஸ் பயிற்சி பள்ளியை, பயிற்சி பிரிவு ஐ.ஜி., தமிழ் சந்திரன் ஆய்வு செய்தார். கோவை பள்ளிக்கு வந்த அவருக்கு, பள்ளி முதல்வர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், பள்ளியின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஐ.ஜி. தமிழ் சந்திரன், பயிற்சி பெறும் போலீசாருடன் கலந்துரையாடினார்.

    போலீசார் மத்தியில் அவர் பேசியதாவது:-

    பயிற்சிக்கு பிறகு பணியிலும், வாழ்க்கையிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இப்போதே கற்றுத்தேர்ந்து கொள்ள வேண்டும். போலீஸ் பணிக்கு உடல்தகுதி மிகவும் முக்கியமானது. எக்காரணம் கொண்டும் தொப்பை வருவதற்கு விடக்கூடாது. போலீஸ் பணியில் சேரும் போது, என்ன அளவில் உடை அணிந்தீர்களோ, அதே அளவு கொண்ட உடையை ஓய்வு பெறும்போ தும் அணிவது முக்கியம். அப்போதுதான், நீங்கள் உடல் தகுதியோடு இருப்பதாக அர்த்தம்.

    போலீஸ் பணியில் சேர்ந்து விட்டதால், உங்களுக்குள் இருக்கும் தனித்திறைமையை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். போலீஸ் பணியானது, மன அழுத்தம் தரக்கூடியது. அதில் இருந்து விடுபட, தனித்திறமையை வளர்த்து பராமரிப்பது முக்கியம். இவ்வாறு ஐ.ஜி., தமிழ் சந்திரன் பேசினார்.

    போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நூலகம், உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

    • திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் தான் விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்லமுடியும்.
    • மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் மேம்படவில்லை.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பாரம்பரிய மீனவர் நலசங்க அலுவலகத்தில் தஞ்சை, புதுகை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம் மண்டபம் பாலசுப்பிரம ணியன், ஜாகிர், பாலன், சோழியக்குடி கோபி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் சங்க தலைவர் அசன் முகைதீன், ஜெகதாப்பட்டி னம் மீனவர் சங்க தலைவர் உத்திராபதி, தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் தான் விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்லமுடியும்.

    மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.

    இதனால் 15-ந் தேதி(வியாழக்கிழமை) காலை தான் கடலுக்கு செல்ல முடியும். 15-ந்தேதி வியாழக்கிழமை மறுநாள் வெள்ளிக்கிழமை. எனவே 14-ந் தேதி காலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.

    தடைக்காலம் முடிந்து பிடித்து வரும் மீன், இறாலுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானிய விலை டீசலை 1800 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலம் உருவாக்கி 23 ஆண்டுகள் ஆகிறது.

    ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் மேம்படவில்லை.

    எனவே மீன்பிடி தடைக்காலத்தை நாட்டுப்படகு, விசைப்படகு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து படகுகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.
    • பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முதலாம் மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்பு குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் தமிழ்செல்வி, திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ச்சியாக கடந்த நான்கு தவணைகளாக அகவிலைப்படி காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அரசு ஊழியர்களின் ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் என்பது வழங்கப்படாமல் உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாமல் மௌனம் சாதித்து வருகிறது. முன்பு நிதி அமைச்சராக இருந்த பி .டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என அறிவித்தார். தற்போது புதிதாக பதவியேற்றுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட முடியாது என தெரிவித்து வருகிறார்.

    அதே போல தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வரும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள் ஆகியோரை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது அவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அரசு தெரிவித்து வந்தது. இதற்கிடையேஅரசு புதிதாக காலை உணவு திட்டம் என அறிவித்துவிட்டு அதை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றாமல் தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிடுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வரும் தொகையை விட அதிகமாக காலை உணவு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ச்சியான எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண தொடர் போராட்டமே தீர்வு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஏற்கனவே 2 தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளோம். வரும் ஆகஸ்ட் 12,13-ந் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து மாநில பேரவை கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து அறிவிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.
    • அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    நெல்லை:

    கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய பொருளாளர் துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுரேஷ்குமார், முடவன் குளம் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பெருமாள் சாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், இருக்கன்துறை ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பாம்பே செல்வகுமார், இன்பம், வினேஸ்ராஜா மற்றும் கபடி பயிற்சியாளர்கள், கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற மே 21-ந் தேதி மாலை மவுலீதுடன் தொடங்குகிறது. மே 31-ந் தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து, ஜூன் 12-ந் தேதி மாலை துவங்கும் சந்தனக்கூடு திருவிழா, ஜூன் 13 அதிகாலை மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது.

    இந்த நிலையில், சந்தனக்கூடு திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு தலைமையில் நடந்தது. கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மே 31 முதல் ஜூன் 13 வரை முக்கிய இடங்களில் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஏர்வாடி நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் பேண வேண்டும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் சமுதாயம் சார்ந்த கொடிகள் எடுத்து வரக்கூடாது, மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு தர்ஹா கமிட்டி உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகமது பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகவேல், ஜோதி மாணிக்கம், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நெல் வயல்களில் கருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
    • அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பகுதியில் தென்காசி சாலையில் உள்ள தேவதானம், சேத்தூர் போன்ற பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நெல் விளைந்த நிலையில் நெல்மணிகளுக்கு பதிலாக காய்ந்த நிலையில் அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது. ஏக்கர் கணக்கில் இது பரவி வருவதால் இதை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் ராஜபாளையம் வேளாண்மை துணை இயக்குநர் (விதை ஆய்வு) வனஜா, பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். நெல் வயல்களில் சமீபத்தில் பரவி வரும் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நைட்ரஜன் உரத்தை அளவாக பயன்படுத்துதல், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்+டெட்ரா சைக்ஜின்-120 கிராம்+காப்பர் ஆக்ஸி குளோரைடு-500 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க கேட்டுக்கொண்டனர்.

    இனிமேல் ஏற்படக்கூடிய நோய்க்கு இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே காய்ந்த நிலையில் உள்ள வயல்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குமாறு தேவதானம் சேர்த்து ஒரு பகுதி நெல் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
    • படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.

    நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர். 

    • விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது
    • உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசி–னார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திற்கு நாளை (புதன்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடகூறியுள்ளார்.

    தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    விழுப்புரம்  தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர்சிவா, மாநில ஆதிதிராவிர் நலக்குழு இணை செயலாளர் புஷ்ப–ராஜ், மாவட்ட துணை செயலாளர் முருகன், தயாளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.

    சிறப்பான வரவேற்பு

    அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளையும் (புதன்–கி–ழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மாவட்ட தி.மு.க. சார்பில் நகர எல்லை யான அய்யூர்அகரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும்.

    நகர தி.மு.க.வினர் விழுப்புரம் நான்கு முனை சாலை சிக்னல் பகுதியில் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். பெண்கள் இதில் திரளாக பங்கேற்கவேண்டும். அரசு நிகழ்ச்சி என்பதால் கூட்டத்தில் யாரும் பங்ேகற்க அனுமதி கிடையாது. காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுக்கும் அனுமதி கிடையாது. எனவே வரவேற்போடு உங்–கள் பணி முடிந்து விட்டது.

    மேலும் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிப்பதோடு, கட்சி பணிகளை சிறப்–க மேற்–கொள்ளவேண்–டும் என்றார். இதில் விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, மும்மர்த்தி, தெய்வசிகாமணி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன், வேம்பிவி, நகர மன்றதலைவர் சக்கரைதமிழ்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்–றி–யக்குழு தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் நகர செய–லாளர் ஜீவா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினக–ரன், மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், மாவட்ட வர்த்–தக அணி அமைப்–பா–ளர் கோல்டு வெங்–க–டே–சன், நக–ர–மன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, நகர இளைஞ–ணி அமைப்பாளர் மணிகண்டன் விழுப்புரம் நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.
    • அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    உடுமலை:

    கேரளாவில்தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    பருவமழை தீவிரமடையும்போது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் தன்னார்வலர் அடங்கிய தாலுகா அளவிலான மீட்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மழை சேதம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்து மீட்பு பணியை துவக்க வேண்டும்.மழைப்பொழிவு, மழை சேதம் விவரங்களை தினமும் பெற்று சேதங்களுக்கு, நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் தடுப்பு பணிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும், கண்காணிப்பு பணி நடக்கும் வகையில், சுழற்சி முறையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்படும்.தமிழக அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தாலுகாவுக்கு ஒரு துணை கலெக்டர் நிலை அதிகாரிகள் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு அமைத்து கண்காணிக்கப்படும். விரைவில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றனர்.

    ×