search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Fields"

    • நெல் வயல்களில் கருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
    • அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பகுதியில் தென்காசி சாலையில் உள்ள தேவதானம், சேத்தூர் போன்ற பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நெல் விளைந்த நிலையில் நெல்மணிகளுக்கு பதிலாக காய்ந்த நிலையில் அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது. ஏக்கர் கணக்கில் இது பரவி வருவதால் இதை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் ராஜபாளையம் வேளாண்மை துணை இயக்குநர் (விதை ஆய்வு) வனஜா, பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். நெல் வயல்களில் சமீபத்தில் பரவி வரும் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நைட்ரஜன் உரத்தை அளவாக பயன்படுத்துதல், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்+டெட்ரா சைக்ஜின்-120 கிராம்+காப்பர் ஆக்ஸி குளோரைடு-500 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க கேட்டுக்கொண்டனர்.

    இனிமேல் ஏற்படக்கூடிய நோய்க்கு இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே காய்ந்த நிலையில் உள்ள வயல்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குமாறு தேவதானம் சேர்த்து ஒரு பகுதி நெல் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • ராஜாபுதுக்குடி கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.
    • குளக்கரைகளில் சுற்றி திரிந்த காட்டு பன்றிகள் இரவில் கூட்டம், கூட்டமாக வயல்களில் புகுந்து நெற்பயிற்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காடுகள், குளக்கரைகளில் சுற்றி திரிந்த காட்டு பன்றிகள் இரவில் கூட்டம், கூட்டமாக வயல்களில் புகுந்து நெற்பயிற்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

    காலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் அதனை கண்டு கண்ணீர் விட்டனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளான ஆறுமுகசாமி, மாடசாமி, அண்ணாவி, சவுந்தரராஜன் ஆகிேயார் கூறும்போது பல மாதமாக நாங்கள் உழைத்த உழைப்பு அனைத்தும் தற்போது இந்த காட்டுப்பன்றிகளால் வீணாகி போனது. சேதமான பயிற்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க மாவட்ட நிர்வாகம், வேளாண்மை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் விவசாய நிலங்களை சேதமாக்கிய காட்டுப்பன்றிகளை இங்கிருந்து விரட்ட வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் முக்கியமான தொழிலாக விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.

    பருவ மழை இல்லாமல் போனதால் சீமானேந்தல், குண்டுகுளம், வேப்பங்குளம், கோவிலாங்குளம், முதல்நாடு, பசும்பொன் ஆகிய கிராம பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கமுதி வட்டாரத்தில் சரியான மழையில்லாமல் போனதால் விவசாயம் சரிவர விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. அதுபோல 3 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு அக்ரி இன்சூரன்ஸ் நிறுவனம் இதுவரை பயிர் காப்பீடு நிதியை வழங்கவில்லை. நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    கடலில் வீணாக கலக்கும் வைகை ஆற்றின் தண்ணீரை கமுதி பகுதிக்கு கொண்டு வந்தால் விவசாயம் செழிக்கும். அதற்கு கலெக்டர், அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

    • சாலைகளில் குவித்து வைத்திருந்த குறுவை நெல்மணிகளை விவசாயிகள் பரப்பி காய வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
    • திருக்காட்டுப்பள்ளி நகர சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதிளில்நேற்றுபகல் நேரத்தில் வெயில் அடித்தது.

    இதனால் சாலைகளில் குவித்து வைத்திருந்த குறுவை நெல்மணிகளை விவசாயிகள் ஆட்களை கொண்டு பரப்பி காய வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளும் தீவிரம் அடைந்தன.

    இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு ஒரு சுமை இல்லாமல் போகும் என்ற நிலை நேற்று பகலில் உருவானது.

    மாறாக நேற்று இரவு திருக்காட்டுப்பள்ளியில் பலத்த மழை பெய்தது. இதனால் திருக்காட்டுப்பள்ளி நகர சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்துஓடியதால் துர்நாற்றம் வீசியது.

    இதைப் போன்றே பூதலூர்ல் இரவு சுமாரான மழை பெய்தது.

    இன்று அதிகாலையில் இருந்து பூதலூரில் லேசாக தொடங்கிய மழை 7 மணி வரை பெய்தது.

    இதனால் காலை நேர பணிகளை செய்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

    காலையில் மழை பெய்ததால் நேற்று காய வைத்திருந்து மூடி வைத்திருந்த நெல்மணிகள் மீண்டும் காய வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் உள்ளாகியுள்ளனர்.

    தொடர்ந்து விவசாயிகள் தரப்பிலும் மற்ற பல விவசாயிகள் அமைப்புகளின் சார்பிலும் ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி வருகிறது.

    இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காலம் தப்பிய மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளதோடு அறுவடை செய்யப்பட்டு உள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை உருவாகியுள்ளது.

    விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழக அரசு குறுவை நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்தி முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், மேலப்பூதனூர், திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, திருப் பயத்தங்குடி, விற்குடி, வாழ்குடி, போலகம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில்அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமா கவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி திடீரென கனமழை பெய்வ தால் அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×