என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீசார் தொப்பை வராமல் உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும்- பயிற்சி போலீசாருக்கு ஐ.ஜி. அறிவுரை
- போலீஸ் பணியில் சேர்ந்து விட்டதால், உங்களுக்குள் இருக்கும் தனித்திறைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- நூலகம், உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றையும் ஐ.ஜி., தமிழ் சந்திரன் பார்வையிட்டார்.
கோவை,
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியை, பயிற்சி பிரிவு ஐ.ஜி., தமிழ் சந்திரன் ஆய்வு செய்தார். கோவை பள்ளிக்கு வந்த அவருக்கு, பள்ளி முதல்வர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், பள்ளியின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஐ.ஜி. தமிழ் சந்திரன், பயிற்சி பெறும் போலீசாருடன் கலந்துரையாடினார்.
போலீசார் மத்தியில் அவர் பேசியதாவது:-
பயிற்சிக்கு பிறகு பணியிலும், வாழ்க்கையிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இப்போதே கற்றுத்தேர்ந்து கொள்ள வேண்டும். போலீஸ் பணிக்கு உடல்தகுதி மிகவும் முக்கியமானது. எக்காரணம் கொண்டும் தொப்பை வருவதற்கு விடக்கூடாது. போலீஸ் பணியில் சேரும் போது, என்ன அளவில் உடை அணிந்தீர்களோ, அதே அளவு கொண்ட உடையை ஓய்வு பெறும்போ தும் அணிவது முக்கியம். அப்போதுதான், நீங்கள் உடல் தகுதியோடு இருப்பதாக அர்த்தம்.
போலீஸ் பணியில் சேர்ந்து விட்டதால், உங்களுக்குள் இருக்கும் தனித்திறைமையை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். போலீஸ் பணியானது, மன அழுத்தம் தரக்கூடியது. அதில் இருந்து விடுபட, தனித்திறமையை வளர்த்து பராமரிப்பது முக்கியம். இவ்வாறு ஐ.ஜி., தமிழ் சந்திரன் பேசினார்.
போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நூலகம், உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.