search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abhishekam"

    • புதிய விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது.
    • வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மதுரை

    மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி.நகர் பாரதிதாசன் தெரு விவேகானந்தர் தெரு சந்திப்பில் உள்ளது வர சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வன்னி மரத்தடியில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

    வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க வன்னி மரத்தடியில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யபட்டது. யாக சாலை பூஜைகள், வாசனை திரவியம், பாலாபிஷேகம் உள்பட அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் பக்தர்களூக்கு வழங்கபட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில்,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்,மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 6-ந் தேதி கஞ்சி வார்த்தல், விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த அரியநாயகிபுரத்தில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பல்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவையொட்டி விரத மிருந்த ஏராளமான பக்தர்கள் அரசலாற்றங்கரையில் இருந்து பால்குடம், சக்தி கரகம், வேல், அக்னி கொப்பரை, காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து, அம்மன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர்.

    அதனைத் தொட்ந்து, நாளை அம்மன் வீதிஉலா காட்சியும், 5-ந் தேதி மகா காளியம்மன் அக்கா, தங்கை திருநடன வீதிஉலா நிகழ்ச்சியும், 6-ந் தேதி கஞ்சி வார்த்தல், விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி பவுர்ணமியையொட்டி பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு மஞ்சள்பொடி,மாப் பொடி,தேன், திரவியபொடி, பால்,தயிர்,இளநீர், பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த திருக்காட்டு ப்பள்ளியில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி நந்தியம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதேபோல், கோயில்பத்து ஆபத்சகா யேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராமநாதபுரம் அருகே சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது அன்னபூர னேசுவரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவில். வாலி வழிபட்ட தலம் என கூறப்படுகிறது.

    அதற்கு சாட்சியாக சீதையை மீட்கும் முன் ராமபிரான் இவ்வழி யாக இலங்கை செல்லும் போது வழிபட்ட வெயிலுக்குகந்த விநாயகர் கோயில் இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூர உள்ள உப்பூரில் உள்ளது.

    மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தட்சி ணாமுர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்க ளுக்கும் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.விரதமிருந்த பெண்கள் கோவிலைச்சுற்றி வந்து வழிபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அபிஷேக பால் மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், சுந்தர பாண்டிய பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது.
    • இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது.

    சேலம்;

    சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது. இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சுகவனேஷ்வரர் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவிலின் நிர்வாகத்தினர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    • கோவில் அருகில் குண்டங்கள் அமைக்கப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அடுத்த மெலட்டூர் அடிச்சேரி தெருவில் மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.

    இக்கோ விலில் கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பரம்பரை அறங்காவலர் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் உதவியால் திருப்பணிகள் நடைபெற்றது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கோவில் அருகில் குண்டங்கள் அமைக்க ப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து மூலவர் மாணிக்க விநாயகர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின், விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலசுப்ர மணியன் குடும்பத்தினர் மற்றும் அடிச்சேரி தெரு கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேங்காய் துருவல் அபிஷேகம், சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
    • நாளை மாலை 1008 எலுமிச்சை பழங்களால் ஆன சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். சத்குரு தியாகராஜ சுவாமிகள்,சேது பாவா சுவாமிகள் மற்றும் ஆதி பீம ராஜ கோஸ்வாமி வழிப்பட்ட தலமாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நாளை (புதன்கிழமை ) காலை 7 மணிக்கு லட்ச ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம், சிறப்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு 10080 எலுமிச்சை பழங்களான சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வை யாளர் ரெத்தினவேல் மற்றும் அமாவாசை கைங்கர்ய குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • ராஜதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    திருவாரூர்:

    ஆடி கடைசி வெள்ளி கிழமையை யொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதேபோல், திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அப்போது பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.

    திருவாரூர் காகிதக்காரத்தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருப்பூண்டி அடுத்த கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமறை மந்திரங்கள் ஓத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஏராளமான சுமங்கலி பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×