மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
Published on

நாகப்பட்டினம்:

திருப்பூண்டி அடுத்த கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமறை மந்திரங்கள் ஓத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஏராளமான சுமங்கலி பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com