search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruppur"

    • ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
    • காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உலகுடையார்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவானி பாசன உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

    நத்தக்காடையூர் - திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உலகுடையார்பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள சூழலில் உலகுடையார்பாளையம் கிராம பொதுமக்கள் தரைப்பாலத்தை சீரமைக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கயம் - நத்தக்காடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் போலீசார் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    • வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

    இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
    • தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோ ரூ.10 குறைந்தது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும்.
    • விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. தகுதியான வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடக்கும்.வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோவை மாற்றவும், முகாமில் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சுருக்கமுறை திருத்த பணி நடக்க உள்ளது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு 1.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளன.வரைவு பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும். இ

    ந்தாண்டு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும். பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, வாக்காளர்கள் தற்போதும் விண்ணப்பிக்கலாம்.தாலுகா அலுவலகங்களில் தேவையான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
    • அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

    இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

    சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், காந்திநகா், மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது. மழையின் காரணமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், பணிமுடிந்து சென்ற தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.மேலும் திருப்பூரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.  

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.
    • திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிசாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா பஸ் நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், பூத்தார்நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.தியேட்டர் பகுதி, ஆசர்நகர், நாராயணசாமிநகர், காந்திநகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, ஜீவாகாலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலர் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உலக வெறிநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
    • தடுப்பூசி போட்டு நோய் வராமல், தடுத்துவிடலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உலக வெறிநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. வெறிநாய் கடித்து விட்டால், கடிபட்ட நாளிலிருந்து 0,3,7,14,28ம் நாட்களில் தவறாமல் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம்.

    நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உடன் குழாய் தண்ணீரில் அல்லது தண்ணீரை புண்மேல் ஊற்றி வழிந்தோடும் படி செய்து கழுவ வேண்டும். கார்பாலிக் அமிலம் கலந்த சோப்பு போட்டு கழுவினால் வைரஸ் கிருமி அழியும். டிஞ்சர் அயோடின் பஞ்சில் நனைத்து, காயத்தில் வைக்க வேண்டும். மேற்கூறியபடி செய்வதன் மூலம் காயத்தில் வைரஸ் கிருமியின் எண்ணிக்கையை குறைத்து, நோய் உண்டாகும் காலத்தை நீட்டித்து, அதற்குள் தடுப்பூசி போட்டு நோய் வராமல், தடுத்துவிடலாம். உடன் மருத்துவரை அணுகி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவ நிலையங்களில் நாளை 28-ந்தேதி அன்று நடைபெறும் இலவச தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு கால்நடைகளை வெறிநோயிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • திருவனந்தபுரம்-மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
    • புனே-கன்னியாகுமரி ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி 2 இணைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருவனந்தபுரம்-மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16332) வருகிற 17-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதுபோல் மும்பை-திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16331) வருகிற 18-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

    மேலும் கன்னியாகுமரி-புனே செல்லும் தினசரி ரெயிலில் (எண்.16382) 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி 2 வருகிற 22-ந் தேதி முதல் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. அதுபோல் புனே-கன்னியாகுமரி செல்லும் தினசரி ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி 2 வருகிற 23-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • தற்போது 7 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 1 என்று இருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    ×