search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thread"

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    • வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
    • தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோ ரூ.10 குறைந்தது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுர ஆதீனம் வெளியிட்டார்.
    • தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் நூலின் விபரங்கள் குறித்து கூறினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதனிடையே உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயி லுக்கு வருகை புரிந்தார்.

    தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

    தொடர்ந்து மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் அச்சிடப்பட்ட ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட அதனை நீதிபதி மகாதேவன் பெற்றுக் கொண்டார்.ஆன்மீகப் பேரவை நிறுவனர் இராம.சேயோன் உடன் இருந்தார்.

    தொடர்ந்து கோயிலுக்கு சென்ற நிதியரசர் மகாதேவன் சுவாமி, அம்பாள், பைரவர் ஆகிய சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

    அப்போது கோயில் நந்தவனத்தில் கடந்த மாதம் யாகசாலை பூஜைக்காக பள்ளம் வெட்டிய போது கிடைத்த சாமி சிலைகள், தேவாரப் பதிகம் தாங்கி செப்பேடுகள் கோயில் பாது காப்பு அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

    அதனை நிதிபதி மகா தேவன் பார்வையிட்டார்.

    அவருக்கு தருமபுரம் ஆதீனம் அதன் விவரங்கள் குறித்து கூறினார்.

    பஞ்சு பதுக்கலையும், ஏற்றுமதியையும் தடுத்து செயற்கையான விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மஞ்சளை போன்று ஜவுளித்தொழிலும் பிரதான தொழிலாக உள்ளது. ஜவுளி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சித்தோடு, காஞ்சிகோவில், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசின் இலவச வேட்டி சேலை உற்பத்தியில் 40 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தான் தயாராகி வருகிறது.

    விசைத்தறிகள் ஷிப்டு முறையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக விசைத்தறிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதேபோல் ஜவுளித்தொழிலும் கடும் பாதிப்பை சந்தித்தது. இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த ஜவுளி மற்றும் விசைத்தறிகள் தற்போது பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி, உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

    வரலாறு காணாத பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஸ்தம்பித்து நிற்கிறது ஜவுளித்துறை. 45 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கண்டி பஞ்சு தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை உயர, அதற்கேற்ப நூல் விலையும் அபரிமிதமாக உயர்ந்து ஜவுளி வணிகத்தை நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு 180 ரூபாய்க்கு வாங்கிய 1 கிலோ நூல் தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    தாறுமாறான நூல் விலையேற்றத்தால் தடுமாறிய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இதனால் படிப்படியாக உற்பத்தியை குறைத்த ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒருகட்டத்தில் பெரும் இழப்பை தாக்குபிடிக்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறாக, ஈரோடு பகுதியில் மட்டும் தொழிலை தொடர முடியாமல் கடந்த 7 மாதத்தில் மட்டும் 5 ஆயிரம் விசைத்தறிகளை விற்பனை செய்துள்ளனர். இதில் பெரும்பாலும் அடிமாட்டு விலைக்கு, பழைய இரும்பு கடைக்கு எடை போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 5 சதவீதம் இது போன்று விற்பனை செய்யப்பட்டதாக கூறுகின்றனர் விசைத்தறியாளர்கள் சங்கத்தினர்.

    விசைத்தறிகள் விற்பனைக்கு சென்றதால், அவை இயங்கி வந்த கூடங்கள் (குடோன்கள்) காலியாக கிடக்கின்றன. பாதி வாடகைக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் அவற்றை பூட்டி வைத்துள்ளனர் உரிமையாளர்கள். விசைத்தறி கூடங்கள் நிறைந்த ஈரோடு, வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், சித்தோடு போன்ற பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட கூடங்கள், வாடகைக்கு என்ற வாசகத்துடன் பதாதைகளை ஏந்தி நிற்கின்றன.

    தலைமுறை தலைமுறையாக நெசவு தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் தற்போது தவித்து வருகின்றனர். பஞ்சு பதுக்கலையும், ஏற்றுமதியையும் தடுத்து செயற்கையான விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர்கள் கந்தவேல் கூறும்போது:-

    பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஈரோட்டில் ஜவுளி தொழில் மற்றும் விசைத்தறி கூடங்கள் ஸ்தம்பித்துள்ளது. நஷ்டத்தை ஈடு கொடுக்க முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். விசைத்தறி கூடங்களும் ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 3000 விசைத்தறிகள் விற்கப்பட்டன. 2000 விசைத்தறிகள் உடைக்கப்பட்டு அவை இரும்பு கடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

    பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதித்து பஞ்சு விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து ஜவுளித்தொழிலை காப்பாற்ற வேண்டும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    பல்லடம்:

    தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி தொழில் மூலம் நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 50 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்த விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது.

    உற்பத்தியான துணிக்கு உரிய விலை கிடைக்காதது, தொழிலாளர் பிரச்சினை, வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் விசைத்தறி தொழில் ஏற்கனவே நலிவடைந்து உள்ளது. தற்போது விசைத்தறி ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூலின் விலை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக்கோரியும் திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வருகிற 5-ந்தேதி வரை 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இன்று 9-வது நாளாக வேலைநிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.

    இதனால் தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான காடா ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதுடன் இன்றுடன் ரூ.900 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி, அதனை நம்பியுள்ள வாகன ஓட்டுநர்கள், கலாசு தொழிலாளர்கள், உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், ஒர்க் ஷாப் தொழிலாளர்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பூர், கோவை மாவட்டங்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து ஜவுளித்தொழிலை காப்பாற்ற வேண்டும் என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி துணிகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.


    ×