search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stock Market"

    • 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
    • தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.

    இந்நிலையில், இன்று டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், பேசிய அவர், "தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது, இது கிரிமினல் குற்றமாகும்.

    தேர்தல்களின்போது முதன்முறையாக, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

    பங்குச்சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் பல முறை கூறினார்.

    ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

    ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200-220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.

    ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.

    தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது

    வரலாற்றில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையில் பாஜகவினரால் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளது

    பங்குச் சந்தை முறைகேட்டால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

    விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும், இதனால் பயனடைந்தவர்கள் யார் என தெரிய வேண்டும்" என்று புள்ளி விவரங்களுடன் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    • பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டு.
    • பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பா.ஜ.க. நேற்று ஒரு நாள் மட்டும் பங்குச்சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்கூறியதாவது:-

    எதற்காக நேற்றைய தினம் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை ஏறியது, அதுமட்டுமில்லாமல் இன்று ஏன் 10 ஆயிரம் புள்ளிகள் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. என்ன காரணம்?

    வாக்கு எண்ணிக்கை ஒருநாள் விட்டு 1-ந்தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஏன் 2-ந்தேதி பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கையை வைக்கவில்லை? ஏனென்றால் பா.ஜ.க. நேற்று ஒரு நாளில் மட்டும் பல லட்சம் கோடிகளை பங்குச்சந்தையில் சம்பாதித்துள்ளது.

    பங்குச்சந்தையில் லாங், ஷாட் என்று சொல்வார்கள் இதில் ஷாட்டில் சென்று அனைத்து முதலீடுகளை வாங்கிவிட்டனர். அதனை நேற்று மாலையே விற்றுவிட்டனர். இன்று மேலும் வாங்குவார்கள் இதில் பா.ஜ.க.வுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்துள்ளது. இதில் பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள் என்பது போகப்போக விசாரணையில் தெரியவரும்.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.

    • தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
    • நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மக்களவைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

    இந்த நிலையில் முடிவுகள் குறித்து நிலையான யூகத்திற்கு வர முடியாததால் தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    இறக்கத்துடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை சென்செக்சில் 2303.45 புள்ளிகளை இழந்து 74275.46 இறக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் நிஃப்டி 700.32 புள்ளிகளை இழந்து 22633.12-ல் தடுமாறி வருகிறது.

    மேலும் இன்றைய பங்குச்சந்தை முடிவில் 3000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
    • வரும் 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கிடையே, 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வரும் திங்கட்கிழமை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பங்குச்சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஜேசீஸ் விங் சார்பில் பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் மீ.குருசாமி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகை–யில், மாணவர்களுக்கு சேமிப்பு பற்றிய நன்மைகளையும், அதனால் அடையும் எதிர்கால பலன்கள் குறித் தும் விரிவாக எடுத்துரைத் தார்.

    இதில் சிவகாசி பட்டயக் கணக்காளரும், ஜே.சி.ஐ. செயலாளருமான ஜே.சி.அருள்மொழி வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பங்குச்சந்தை முதலீடு, பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், இந்திய பங்குச் சந்தை–யின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். ேமலும் மாணவர்களின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், உரிய பதிலும் அளித்தார்.

    முன்னதாக ஜே.சி.சி.கிரிதரன் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை பேராசிரியருமான முனை–வர் அ.பாபு பிராங்கிளின் நன்றி கூறி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தி–ருந்தார். இதில் 240 வணிகவி–யல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • ஆறுமுகம் உறவினருக்கு சொந்தமாக உள்ள பாத்திரக்கடையை நடத்தி வருகிறார்.
    • உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை பேபி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). உளுந்தூர்பேட்டையில் இவரது உறவினருக்கு சொந்தமாக உள்ள பாத்திரக்கடையை நடத்தி வருகிறார். மேலும், பங்கு சந்தையில் முதலீடு செய்து தொழில் செய்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை பூர்வீகமாக கொண்ட இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.

    பங்குசந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக ஆறுமுகம் கடுமையான நஷ்டம் அடைந்தார். இதனால் இவருக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஆறுமுகம் மனைவி கழிவறைக்கு சென்றார். அங்கு ஆறுமுகம் தூக்கு போட்டு இறந்து தொங்கிய நிலையில் இருந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் விரைந்து வந்த உளுந்தூ ர்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன.
    • எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் நிறுவனம் பல்வேறு முறைகேடு புகார்களை கூறியது.

    இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் அதானியின் சொத்து மதிப்பும், ரூ.3.28 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் உண்மையான நிலையை அறியும் வரை தொடர்ந்து சரிந்து கொண்டேதான் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பங்கு சந்தையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்காக புதிய பங்குகளை வெளியிட இருந்தது.

    முதலீட்டாளர்களும், பங்குகளை வாங்க விண்ணப்பித்து பணம் செலுத்தியிருந்தனர். இந்நிலையில் பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் புதிய பங்கு விற்பனையை ரத்து செய்வதாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவும், அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக அதானி என்டர்பிரைசஸ் தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கு சந்தை முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது.

    நாளடைவில் ஏற்ற இறக்கமாக இருப்பதால் அசாதாரண சூழ்நிலை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

    எனவே எந்த ஒரு சாத்தியமான நிதி இழப்புகளில் இருந்தும், அவர்களை பாதுகாக்க எப்.பி.ஓ.(பாலோ ஆன் பப்ளிக் ஆபர்) உடன் செல்ல வேண்டாம் என்று அதானி வாரியம் முடிவு செய்துள்ளது என கூறப் பட்டுள்ளது.

    மேலும் அதானி வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ அறிக்கையில், ஒரு தொழிலதிபராக எனது பயணத்தில், அனைத்து பங்குதாரர்களிடம் இருந்தும், குறிப்பாக முதலீட்டாளர்கள் சமூகத்தின் அமோக ஆதரவை பெறுவதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×