search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seriously injured"

    • பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர்.
    • காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி அரசு நகர் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 28 ஆண்கள், 18 பெண்கள் உள்பட மொத்தம் 46 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆத்திமுத்து(வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்டு பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

    ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டி சென்றதாக பயணிகள் தெரிவித்தனர். ஆனால் இதை கவனத்தில் கொள்ளாத ஓட்டுநர் தொடர்ந்து அலட்சியமாக செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.

    இந்த சூழலில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டருக்கு வழி கொடுப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக இறக்கினார்.

    அப்போது திடீரென பஸ் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். மேலும் மீட்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் விரைவாக உயிருடன் விரைவாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் காயமடைந்த சிலரை தனது வாகனத்தில் ஏற்றி உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்புலாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போனில் பேசியபடியே டிரைவர் பேருந்தை அலட்சியமாக ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என பயணிகள் தெரிவித்தனர். பொதுமக்களை ஏற்றி செல்லும் போக்குவரத்து

    துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • குழந்தை அஸ்மிதாவை அவரது பாட்டி கையில் தூக்கிக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.
    • படுகாயமடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்.

    பேராவூரணி அருகே கொன்றைக்காடு மேற்கு பகுதியைச் சேர்ந்த கரிகாலன்- ராதிகா.

    இவர்களின் மகள் அஸ்மிதா (3).

    குழந்தை அஸ்மிதாவை அவரது பாட்டி ராஜம்மாள் கையில் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டி கடைக்கு சென்றபோது திடீரென அவ்வழியாகச் சென்ற வெறி நாய் பாட்டியின் காலில் கடித்தது.

    இதனால் நிலை தடுமாறிய ராஜம்மாள் கீழே விழுந்ததில் குழந்தை அஸ்மிதாவின் கையில் வெறிநாய் பலமாக கடித்தது.

    இவர்களின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடி வந்த திருப்பதி என்பவரையும் நாய் கடித்து விட்டு ஓடியது.

    அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தை அஸ்மிதா, ராஜம்மாள், திருப்பதி ஆகியோரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு படுகாயமடைந்த குழந்தை அஸ்மிதாவை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • பின்னால் வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.
    • லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் படுகாயம் அடைந்தான்.

    திருவாரூர்:

    நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி நீலாதாட்சி.

    இவர்களுடைய மகன் அன்புச்செல்வன் (வயது14).

    வண்டாம்பாளை அருகே உள்ள தனியார் பள்ளியில் அன்புச்செல்வன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அன்புச்செல்வன தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு சைக்கிளில் சென்று கூடைப்பந்து பயிற்சி பெறுவது வழக்கம்.

    நேற்று காலை வழக்கம் போல் திருவாரூர் விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று விட்டு சைக்கிளில் அன்புச்செல்வன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

    திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் வண்டாம்பாளை ஆர்ச் அருகே சென்றபோது பின்னால் திருவாரூரில் இருந்து வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவன் அன்புச்செல்வன், லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான்.

    உடனே அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அன்புச்செல்வனை பரிசோதித்த டாக்டர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த சுந்தரை (40) கைது செய்தனர்.

    மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த மாணவன், லாரி மோதி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • ராமர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு செங்குளத்தை சேர்ந்தவர் ராமர் (வயது24). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இளையாமுத்தூர் விலக்கு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் ராமர், ஆபிரகாம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

    • படுகாயமடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
    • போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கப்பூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 12) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

    கப்பூர் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருப்பதாகவும், கம்பியில் பல இடங்களில் ஜாயிண்ட் அடித்து மின்விநியோகம் செய்யப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதால், உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கப்பூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீர்த்தனா மீது இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கப்பூர் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்கம்பியை சீரமைக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூர் சாலை மார்க்கத்தில் மங்கைநல்லூர் என்ற இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 10:30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருவதாகவும் விரைவில் புதிய மின் கம்பங்களை அமைத்து மின் கம்பியை உயர்த்தி கட்டி தருவதாகவும் அளித்த உறுதி மொழியை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
    • விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    லாஸ்ரியோஸ்:

    ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது.

    பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி ரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

    விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விமானி அதிர்ஷ்டசாலி என்றும், அதனால் தான் அவர் உயிருடன் மீண்டார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

    தற்போது விமானத்தின் காக்பிட் பகுதியில் பறவை மோதி நிற்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவுசிகாஸ்ரீ ( வயது 4).
    • விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது டீ எதிர்பாராத விதமாக கொட்டியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவுசிகாஸ்ரீ ( வயது 4). நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் டீ போட்டு குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது டீ எதிர்பாராத விதமாக கொட்டியது. இதனால் சூடு தாங்காமல் சிறுமி வலியால் அலறி துடித்தாள். படுகாயமடைந்த சிறுமியை மீட்ட குடும்பத்தி னர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • எர்ணாகுளத்தில் இருந்து நேற்று ஒரு மினி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    மன்னார்குடி:

    கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 13 நபர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மினி வேன் மூலமாக புறப்பட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம் காவல் நிலையம் அருகில் வேன் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததுமு விக்கிர பாண்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணம் அடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விக்கிர பாண்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.
    • விபத்தில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கருமர மேஸ்திரி தெருவை சார்ந்த ரகீம் பேக் மகன் பாரூக் 27, தி.மு.க 8-வது வார்டு பிரதிநிதி அன்சாரி மகன் முகமது ரியாஸ் (19) பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் முகமது ரியாசை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு நேற்று சேலத்தில் இருந்து விழுப்புரம் வருகை புரிந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.

    அரசூரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு 9 மணி அளவில் திருவெண்ணைநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசூர் தனியார் பங்க் அருகே செல்லும் பொழுது அரசூர் இந்திரா நகரை சார்ந்த புனிதவதி (40) சாலையை கடக்க முயன்ற போது பாரூக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புனிதவதி மீது மோதி கீழே விழுந்தது. இதில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காய மடைந்த பாரூக் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு இன்று அதிகாலை அனுப்பி வைத்தனர். அங்கு வரும் வழியிலேயே பாரூக் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காயமடைந்த முகமது ரியாஸ், புனிதவதி ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • உ.ளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர்.
    • இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார்.

     கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணி களுடன் சென்னைக்குச் புறப்பட்டு வந்தது. இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலைநடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது.  இதில் பஸ்சில் பயணம் செய்த 8-க்கும் மேற்பட்ட பணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டசமாக உயிர்த்தப்பினர். போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்கிசை கிரேன் மூலம் அப்புற ப்படு த்தும் பணியில்ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் எதிரே ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படு த்தியது. 

    • திருவெண்ணைநல்லூர் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி பலியானார்.
    • மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாயி . இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள புளிய மர கிளைகளை வெட்ட மரத்தில் ஏறினார். இந்நிலையில் மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது. அப்போது தண்டபாணி குரங்கு தன்னை கடிக்க வருகிறது என்று மரத்திலிருந்து கீழே குதித்தார்.

    இதில் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்டபாணி யைமீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாலத்தில் கார் மோதியதால் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஆசிரியராக பணி வருபவர் ஜான் பெஸ்டர்ட். இவர் சிவகங்கையில் இருந்து பள்ளிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

    திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் ஆசிரியர் ஜான் பெஸ்டர்ட் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த திருக்கோஷ்டியூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகம், காவலர் வீரபாண்டியன் ஆகியோர் காயமடைந்த ஆசிரியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×