சேலம் மணியனூரில் சூடான டீ கொட்டியதில் சிறுமி படுகாயம்

மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவுசிகாஸ்ரீ ( வயது 4).விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது டீ எதிர்பாராத விதமாக கொட்டியது.
சேலம் மணியனூரில் சூடான டீ கொட்டியதில் சிறுமி படுகாயம்
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவுசிகாஸ்ரீ ( வயது 4). நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் டீ போட்டு குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது டீ எதிர்பாராத விதமாக கொட்டியது. இதனால் சூடு தாங்காமல் சிறுமி வலியால் அலறி துடித்தாள். படுகாயமடைந்த சிறுமியை மீட்ட குடும்பத்தி னர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com