நாய் கடித்ததில் குழந்தை படுகாயம்

குழந்தை அஸ்மிதாவை அவரது பாட்டி கையில் தூக்கிக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.படுகாயமடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாய் கடித்ததில் குழந்தை படுகாயம்
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்.

பேராவூரணி அருகே கொன்றைக்காடு மேற்கு பகுதியைச் சேர்ந்த கரிகாலன்- ராதிகா.

இவர்களின் மகள் அஸ்மிதா (3).

குழந்தை அஸ்மிதாவை அவரது பாட்டி ராஜம்மாள் கையில் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டி கடைக்கு சென்றபோது திடீரென அவ்வழியாகச் சென்ற வெறி நாய் பாட்டியின் காலில் கடித்தது.

இதனால் நிலை தடுமாறிய ராஜம்மாள் கீழே விழுந்ததில் குழந்தை அஸ்மிதாவின் கையில் வெறிநாய் பலமாக கடித்தது.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடி வந்த திருப்பதி என்பவரையும் நாய் கடித்து விட்டு ஓடியது.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தை அஸ்மிதா, ராஜம்மாள், திருப்பதி ஆகியோரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு படுகாயமடைந்த குழந்தை அஸ்மிதாவை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X

Maalai Malar
www.maalaimalar.com