திருவெண்ணைநல்லூர் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி பலி

திருவெண்ணைநல்லூர் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி பலியானார்.மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது.
திருவெண்ணைநல்லூர் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி பலி
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாயி . இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள புளிய மர கிளைகளை வெட்ட மரத்தில் ஏறினார். இந்நிலையில் மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது. அப்போது தண்டபாணி குரங்கு தன்னை கடிக்க வருகிறது என்று மரத்திலிருந்து கீழே குதித்தார்.

இதில் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்டபாணி யைமீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com