search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ranchi"

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
    • ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்.

    நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    "ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது டெல்லியில் இருந்து புறப்படும் நிலையில் இல்லை. சாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஞ்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்," என்று ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • ராஞ்சியில் உள்ளது ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனம்
    • இட்லி விற்று கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறார்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன. அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.

    பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 18-மாத காலமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை.

    இந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவருக்கு மனைவியும், பள்ளிக்கு செல்லும் 2 மகள்களும் உள்ளனர்.

    இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

    ஆனால், ஹெச்.இ.சி. சம்பளம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்ததால், நிதி நெருக்கடி அதிகரித்தது. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால், பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இதனால் மகள்கள் இருவரும் வீட்டிற்கு அழுது கொண்டே வருவார்கள்.

    நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

    இந்தியர்கள் நிலவை தொட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் அதே வேளையில் அதற்காக பாடுபட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.

    நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார். #MSDhoni #DivriTemple
    டேராடூன்:

    நவராத்திரி பண்டிகை கடந்த 10ம் தேதி தொடங்கி நடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக,  வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம் .

    நவராத்திரி பண்டிகை தினங்களில் முக்கிய தலைவர்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும்  பாலிவுட் நட்சத்திரங்கள்
    தங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி மகிழ்வார்கள்.

    இந்நிலையில், நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார்.

    ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எம்.எஸ்.டோனி அந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனை வணங்கிய பின்னர் தனது காணிக்கையை செலுத்தினார். டோனி வருகையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MSDhoni #DivriTemple
    ஆயுஷ்மான் திட்டத்தால் சுமார் 50 கோடி ஏழை மக்கள் பலனடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #Modi #AyushmanBharat
    ராஞ்சி:

    இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. 

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார். 
     
    உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது. ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று ஜார்க்கண்ட் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் நான் நிறைவேற்றி உள்ளேன். இன்று துவங்கப்பட்டுள்ள கனவுத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் கிடைத்துள்ளது.



    சிலர் இந்த திட்டத்தை மோடிகேர் என அழைக்கிறார்கள். சிலர் ஏழைகளுக்கான திட்டம் என அழைக்கிறார்கள். இந்த திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏழைகளுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டது தான் ஆயுஷ்மான் பாரத். 

    கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஈடாக இந்த திட்டத்தால் பலனடைபவர்கள் எண்ணிக்கை உள்ளது.  

    முந்தைய அரசுகள் வெறும் வாக்கு வங்கி அரசியலை கடைப்பிடித்து மட்டுமே ஆட்சிக்கு வந்தது. ஆனால், எங்கள் அரசு உடல் நலம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த திட்டத்தால் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர். நாட்டின் ஏழைகளுக்காக சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். #Modi #AyushmanBharat
    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தங்களது வீட்டிலேயே தூக்கிட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Ranchi #Jharkhand #Sucide
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் அர்சாண்டே. இந்த கிராமத்தில் வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூக்கிட்டு இறந்ததாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

    அங்கு 2 கைக்குழந்தைகள் உட்பட 7 பேர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    அந்த குடும்பத்தினர் வறுமையில் வாடியதாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வறுமையின் காரணமாக 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Ranchi #Jharkhand #Sucide
    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு, கேப்டன் டோனி ராஞ்சியில் உள்ள தியோரி கோவிலில் இன்று காணிக்கை செலுத்தினார். #Dhoni #DeoriTemple
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ளது தியோரி கோவில். இங்குள்ள துர்கா மாதா மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இந்த கோவிலின் அதிதீவிர பக்தர்.

    சமீபத்தில் நடைபெற்ற 11-வது ஐபிஎல் சீசனில், இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.



    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் டோனி, இன்று திடீரென தியோரி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்ட அவர், தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தினார். அதன் பின்னர், சாமி கும்பிட்டு வந்ததும், அங்கு காத்திருந்த தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். #Dhoni #DeoriTemple
    மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வரும் லாலு பிரசாத், தனது மகன் திருமணத்துக்கு வழங்கப்பட்ட 3 நாட்கள் பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்பினார். #LaluPrasadYadav
    ராஞ்சி:

    பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. 

    முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டு தண்டனையும் லாலுவுக்கு வழங்கப்பட்டது. 

    ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மகனின் திருமணத்துக்காக 5 நாள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், 3 நாள் பரோல் மட்டுமே கிடைத்திருந்தது.

    இந்நிலையில், மகனின் திருமணத்தில் பங்கேற்ற லாலு பிரசாத், தனது பரோல் முடிந்து இன்று ராஞ்சி சிறைக்கு திரும்பினார். முன்னதாக, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரியிருந்த லாலுவுக்கு, 6 வார காலம் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே ஜாமீனுக்கான நடைமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் 6 வார கால ஜாமினில் லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பவுள்ளார். #LaluPrasadYadav
    ×