search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.டோனி"

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.

    சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.

    இந்நிலையில் டாஸில் வெற்றி பெற பயிற்சி செய்து வருவதாக எஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    டாஸ் குறித்து பேசிய அவர், "டாஸை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதை நீ வென்றாக வேண்டும். எனவே, அதற்கு பயிற்சி எடு என டோனி பாய் கூறினார். அப்போதில் இருந்து டாஸ் போடுவதை தொடர்ச்சியாக டக் அவுட்டில் பயிற்சி செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 9 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அதில் 8 முறை டாஸில் தோற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் மட்டும் தான் அவர் டாஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார்
    • அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும்

    இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த டோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.

    ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று டோனி நேரடியாக கூறிவிட்டதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

    ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். அதனால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி டோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது
    • மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

    இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் எம்.எஸ்.டோனி களமிறங்கினார்.
    • டோனிக்கு சி.எஸ்.கே. அணி உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.

    சென்னை:

    சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்யுயுள்ளார்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும். 2010, 2011, 2018 மற்றும் 2021 என 4 முறை டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே.

    2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

    199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

    இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் களமிறங்கிய எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அணி வீரர்களும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    • 30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலத்தில் இந்த போர்வையை அப்புசாமி உருவாக்கியுள்ளார்.
    • சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் தறி மூலம் போர்வையில் உருவாக்கி வந்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அப்புசாமி என்பவர் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து அதனை எலக்ட்ரானிக் தறி மூலம் போர்வையில் உருவாக்கி வந்தார்.

    அந்த வகையில் தற்போது கடந்த 2 மாதங்களாக பல முயற்சி செய்து இறுதியில் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.டோனியின் படம் ஒருபுறமும், மற்றொருபுறம் விராட் கோலி உருவ படத்தையும் வடிவமைத்துள்ளார்.

    30 இன்ச் நீளம் மற்றும் 20 இன்ச் அகலத்தில் இந்த போர்வையை அப்புசாமி உருவாக்கியுள்ளார். கைத்தறி துணிகளில் இருபுறமும் ஒரே டிசைன் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேகேஆர் அணிக்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    • 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

    அந்தவகையில் இந்தியாவில் தற்போது ரஞ்சி தொடரானது நடைபெற்று வரும் இவ்வேளையில் உள்ளூர் அணிகளை சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

    எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் கூறுகையில்:-

    ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    சென்னை அணியில் நான் இருந்த வரை டோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

    இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    பீகார்:

    டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை. 

    இதற்கு நியூ குளோபல் நிறுவனம் சரியாக சந்தைப்படுத்தாதே காரணம் என டிஎஸ் எண்டர்பிரைசஸ் குற்றம்சாட்டியது.

    இதனால் நியூ குளோபல் நிறுவனம் மீதமிருந்த உரங்களை திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக 30 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியது. ஆனால், காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது செல்லுபடியாகவில்லை. இதுதொடர்பாக, நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இந்நிலையில் டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா, நியூ குளோபல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் டோனி, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்ததால் இவ்வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. 

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேல் விசாரணையை மஜிஸ்திரேட் அஜய்குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. அவர் இதன் விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டோனியின் மகள் ஷிவா உற்சாகப்படுத்தும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. #MSDhoni #Ziva #HardikPandya
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அயர்லாந்திர்கு எதிரான டி20 போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஹர்திக் பாண்டியை உற்சாகப்படுத்தும் விதமாக டோனியின் மகள் ஷிவா பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஷிவா, கம் ஆன் ஹர்திக் கம் ஆன் என கத்துகிறார். இந்த வீடியோவை டோனி மனைவி சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தார்.

    அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, எனக்கான சியர்லீடர் (உற்சாகப்படுத்துபவர்)  கிடைத்து விட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார். டோனியின் மகள் ஷிவாவின் வீடியோ அடிக்கடி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெறும். ஷிவாக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் நடனமாடுவது, பாடுவது போன்ற வீடியோக்கள் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. #MSDhoni #Ziva  #HardikPandya
    ×