search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "infant"

    • துணியில் சுற்றப்பட்டிருந்த குழந்தையை ஒரு நாய் இழுத்து கொண்டிருந்தது.
    • சம்பவ இடத்துக்கு சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை மாஞ்சோலை தெருவில் இன்று காலை தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது.

    துணியில் சுற்றப்பட்டி ருந்த குழந்தையை ஒரு நாய் இழுத்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் நாயை விரட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற வர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
    • கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும் கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 29ம் தேதி ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், ரமேஷின் மரணத்தை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்.

    விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்ததை மர்ம மரணம் என பதிவு செய்து விசாரிக்க வேண்டும். கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும். கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். ரமேஷ் மரணம் சார்ந்த, சில சந்தேகநபர்கள் உள்ளார்கள். அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள்.

    தகவலறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிர ண்டு இளங்கோவன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்து, பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததையடுத்து. ஆர்ப்பாட்டத்தை கைவி ட்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் லிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகமது உதுமான், மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், சேகர், தியாகு ரஜினிகாந்த், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.

    பீகார் மாநில அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது பிரசவத்துக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கம்போல், காலை எழுந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக சென்ற தாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்து 8 நாட்களே ஆன அவரது ஆண் குழந்தை சிறு சிறு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. குழந்தையின் கால்களிலும், உடலின் சில பகுதிகளிலும் எலி கடித்ததற்கான வடுக்களும், உறைந்த இரத்தமும் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு இதய குறைபாடு இருந்ததினால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து இருந்ததாகவும், அதனாலேயே குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், மருத்துவமனையில், எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், அம்மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். #Bihar
    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தங்களது வீட்டிலேயே தூக்கிட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Ranchi #Jharkhand #Sucide
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் அர்சாண்டே. இந்த கிராமத்தில் வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூக்கிட்டு இறந்ததாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

    அங்கு 2 கைக்குழந்தைகள் உட்பட 7 பேர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    அந்த குடும்பத்தினர் வறுமையில் வாடியதாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வறுமையின் காரணமாக 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Ranchi #Jharkhand #Sucide
    குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #truckaccident
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வல் கிராமம் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும். இன்று அதிகாலை 5 மணியளவில் அவ்வழியே சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள வீட்டில் புகுந்தது.

    வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த, சந்தோஷ் ரத்வா, அவரது மனைவி கைலாஷ் மற்றும் அவர்களது 9 மாத குழந்தை அவினாஷ் ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமேதி தெரிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #truckaccident
    ×