search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RR"

    • சாம்சன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • துருவ் ஜூரல் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் டி காக், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். ஆனால் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். இதன்மூலம் 2 ஓவரில் 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.

    அதன்பின் கேஎல் ராகுல் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேலும், அணியின் ரன்ரேட்டை 10-க்கு கொண்டு வந்தது. பவர்பிளேயில் 46 ரன்கள் அடித்திருந்தது. 10 ஓவரில் 94 ரன்கள் சேர்த்திருந்தது.

    கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தீபக் ஹூடா 30 பந்தில் அரைசதம் அடித்தார். அ அரைசதம் அடித்த அடுத்த பந்தில் தீப் ஹூடா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். லக்னோ அணி 15 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    16-வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார்.

    18-வது ஓவரில் கே.எல். ராகுல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் அவர் 76 ரன்கள் அடித்தார்.

    கடைசி மூன்று ஓவரில் குறைவான ரன்களே கிடைக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 24, பட்லர் 34 என வெளியேறினர். அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து சாம்சன்- ஜூரல் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். லக்னோ தரப்பில் யாஷ் தாகூர், ஸ்டோய்னிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது.

    ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஆர்சிபி-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியிருந்தது.

    ஆர்சிபி-யை வீழ்த்தியன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடம் வகிக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவிற்கு அடுத்த இடமான 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே (ரன்ரேட்= +0.529), லக்னோ (ரன்ரேட்= +0.123), குஜராத் (ரன்ரேட்= -1.055) அணிகள் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.

    மும்பை 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.133) 7-வது இடத்தையும், டெல்லி 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.477) 8-வது இடத்தையும், பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மூலம் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றி மூலம் கடைசி இடததை பிடித்துள்ளது.

    • ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
    • பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.

    நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...

    ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

    தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

    இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.

    பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    • கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

    ராஜஸ்தான் அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் கேஷவ் மகராஜ் இணைந்துள்ள மேலும்

    இதேபோல கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அல்லா கசன்ஃபரை கொல்கத்தா அணி நியமித்துள்ளது.



     


    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வருண் ஆரோன், மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். #IPL2019 #KKRvRR
    கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியால் 175 ரன்களே எடுக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்தான்.

    அவர் நான்கு ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தொடக்க பேட்ஸ்மேன்களான கிறிஸ் லின் (0), ஷுப்மான கில் (14) ஆகியோரை அவுட்டாக்கியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் ஏற்கனவே இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார். மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



    இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள வருண் ஆரோன் இதுகுறித்து கூறுகையில் ‘‘எல்லாமே சிறப்பாக உள்ளது. நான் எப்போதுமே என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த போட்டிக்கு முந்தைய போட்டியில் ஒரு ஓவர்தான் வீசினேன். அதில் நான் தவறு ஏதும் செய்ததாக உணரவில்லை. எப்போதுமே சிறந்ததாகவே உணர்கிறேன். நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதே எனது விருப்பம்’’ என்றார்.

    வருண் ஆரோன் கடைசியாக 2014-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #RRvCSK #MSDhoni
    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.



    ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சென்னை அணிக்கு சாண்ட்னர் வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    இந்தப் போட்டியில் டோனி 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #RRvCSK #MSDhoni

    ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை - ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPL2018 #MIvRR #CSKvSRH
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சென்னை அணி பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. டெல்லி, பெங்களூர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற உள்ளன.

    மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே பிளேஆப் சுற்றுக்கு செல்வது யார் என்பது? முடிவு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. அடியில் கிடந்த மும்பை அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.



    கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட்டில் சிறப்பாக இருப்பதால் மும்பை 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.

    பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. வெற்றி பெறும் அணி தொடர்ந்து வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு குறையும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

    4 மணிக்கு புனேவில் நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டத்தில் ஒன்றில் வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று வலுவானதாக திகழும் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் 8-வது வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால் பந்து வீச்சுத்தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

    பேட்டிங்கில் கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சு அபாரமாக அமைந்தால் தான் ஐதராபாத்தை வீழ்த்த இயலும். கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பவுலர்கள் மீது டோனி அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி யுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் பதிலடி கொடுக்கும் வேட்கையுடனும் அந்த அணி உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் ஐதராபாத் அணி திகழ்கிறது கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப்பதான், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கிலும், ரஷித்கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த், கவுல் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல
    நிலையில் உள்ளனர். சகீப் அல்-ஹசன் ஆல் ரவுண்டரில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

    இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை -5ல், ஐதராபாத்-2ல் வெற்றி பெற்றுள்ளன.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்துள்ளது. #RRvCSK #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. வாட்சன், ராயுடு தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    முந்தைய போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தார். வாட்சன் மற்றும் ரெய்னா ஜோடி சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். 12-வது ஓவரில் வாட்சன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து ரெய்னாவும் 52 ரன்களில் அவுட் ஆனார்.

    பின்னர் களமிறங்கிய தோனி , பில்லிங்ஸ் கூட்டணி இறுதி கட்டத்தில் எடுத்த முயற்சியால் 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு  176 ரன்கள் எடுத்தது.  ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா 2 விக்கெட் எடுத்தார். 

     177  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. #IPL2018 #RRvCSK
    ×