search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளேஆப் சுற்றில் நுழைவது யார்? மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
    X

    பிளேஆப் சுற்றில் நுழைவது யார்? மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

    ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை - ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPL2018 #MIvRR #CSKvSRH
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சென்னை அணி பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. டெல்லி, பெங்களூர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற உள்ளன.

    மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே பிளேஆப் சுற்றுக்கு செல்வது யார் என்பது? முடிவு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. அடியில் கிடந்த மும்பை அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.



    கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட்டில் சிறப்பாக இருப்பதால் மும்பை 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.

    பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. வெற்றி பெறும் அணி தொடர்ந்து வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு குறையும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

    4 மணிக்கு புனேவில் நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டத்தில் ஒன்றில் வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று வலுவானதாக திகழும் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் 8-வது வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால் பந்து வீச்சுத்தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

    பேட்டிங்கில் கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சு அபாரமாக அமைந்தால் தான் ஐதராபாத்தை வீழ்த்த இயலும். கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பவுலர்கள் மீது டோனி அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி யுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் பதிலடி கொடுக்கும் வேட்கையுடனும் அந்த அணி உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் ஐதராபாத் அணி திகழ்கிறது கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப்பதான், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கிலும், ரஷித்கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த், கவுல் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல
    நிலையில் உள்ளனர். சகீப் அல்-ஹசன் ஆல் ரவுண்டரில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

    இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை -5ல், ஐதராபாத்-2ல் வெற்றி பெற்றுள்ளன.
    Next Story
    ×