search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Draupadi murmu"

    • நாடு முழுக்க தீபாவளி கொண்டாட்டங்கள் கோலகலம்.
    • குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

    பிரதமர் மோடி தவிர, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய மந்திரிகளான பியூஷ் கோயல், ஸ்மிருதி இராணி ஆகியோரும் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசினர். நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசு தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் விருந்து நடைப்பெற்றது.
    • எந்த காரணத்தையும் ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவிக்கவில்லை.

    ஜி-20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று அளித்த இரவு விருந்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பங்கேற்கவில்லை. அதற்கு எந்த காரணத்தையும் ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவிக்கவில்லை.

    அதேபோல சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

    • குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் விருந்தளித்தார்.
    • இதில் கலந்துகொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை குடியரசு தலைவர், பிரதமர் வரவேற்றனர்.

    புதுடெல்லி:

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் சிறப்பு விருந்தளித்தார்.

    சிறப்பு விருந்தில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர்.

    இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜியா, மொரீஷியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

    • சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை ஜனாதிபதி டி.வி.யில் பார்த்து மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன்மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

    இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோ மற்றும் சந்திரயான் 3 திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம், நமது விஞ்ஞானிகள் புதிய வரலாற்றை உருவாக்கியது மட்டுமல்லாமல், புவியியல் யோசனையையும் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். உண்மையிலேயே இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வானது அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன். மேலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். சாதனைகள் மேலும் வரவிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

    • பொருளாதார அதிகாரம், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கிளன் நிலையை வலுப்படுத்துகிறது.
    • ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது.

    நாட்டில் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    அனைத்து இடங்களிலும் திருவிழா சூழலை காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

    இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது.

    ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது.

    காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர்.

    சரோஜினி நாயுடு, ரமாதேவி ஆகியோர் பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.

    மகளிர் அதிகாரத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    ஒவ்வொரு துறையிலும் பெண்கள் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தற்போது ஒவ்வொரு துறையிலும் பெண்களின் சாதனை அதிகமாக உள்ளது.

    பொருளாதார அதிகாரம், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 6ம் தேதி வரை அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார்.
    • பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார். அங்கு, ஒடிசா மாநிலத்தின் ராய்ரங்பூர், பஹத்பூர் மற்றும் பரிபடா மாவட்டங்களுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (மே 4 ஆம் தேதி) பஹாத்பூரில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைத் தொடர்ந்து, ஹட்பத்ராவில் உள்ள பிரம்மா குமாரிகள் மையத்திற்குச் செல்லும் அவர், அங்கு பிரம்மா குமாரிகளின் மையத்தில் 'போதையில்லா ஒடிசா' பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

    இன்று மாலை, ரைரங்பூர் ஸ்டேடியத்தில் ரைரங்பூர் நகராட்சியால் அவருக்கு மரியாதை அளிக்கப்படும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    மே 5ம் தேதி அன்று (நாளை) குடியரசுத் தலைவர் முர்மு பண்டிட் ரகுநாத் முர்முவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அவர் சிமிலிபால் சரணாலயத்திற்கு செல்கிறார்.

    மே 6ம் தேதி, பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    • ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

    மதுரை:

    தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார்.

    ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.

    அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்ட உள்ளது. அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.

    • ஈஷா யோகா மையத்திற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஈஷா மைய நிறுவனர் சத்குரு மற்றும் நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.
    • ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி, தியானலிங்கம், 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிடுகிறார்.

    கோவை:

    கோவை பூண்டி அருகே ஈஷா யோகா மையம் உள்ளது.

    இந்த யோகா மையத்தில் வருடந்தோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

    தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் மகா சிவராத்திரி வழா தொடங்குகிறது. லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்தி வாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சியுடன், அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்த ஆண்டு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

    இதற்காக அவர் வருகிற 18-ந்தேதி காலை டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு செல்கிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்கிறார்.

    அங்கு மீனாட்சியம்மனை தரிசித்து விட்டு கோவிலை சுற்றி பார்க்கிறார். தொடர்ந்து கார் மூலமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்.

    அங்கிருந்து விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஈஷா யோகா மையத்திற்கு மாலை 6 மணிக்கு வருகிறார்.

    ஈஷா யோகா மையத்திற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஈஷா மைய நிறுவனர் சத்குரு மற்றும் நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

    அதனை தொடர்ந்து ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி, தியானலிங்கம், 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றையும் பார்வையிடுகிறார்.

    பின்னர் ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிலும் பங்கேற்கிறார்.

    மேலும் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் இருந்த படியே ஆதியோகி சிலையை பார்வையிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளையும் ஈஷா மைய நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    பின்னர் அவர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர் புறநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கோவையில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிவதற்காக ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் விரைவில் கோவை வருகை தர உள்ளனர்.

    அவர்கள் கோவை வந்து, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிகின்றனர்.

    இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு குன்னூர் வெலிங்டனில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.
    • மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    புதுடெல்லி:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார்.

    இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

    இதற்கிடையே சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கொடுத்தனர்.

    அக்கடிதத்தில் அரசியல் சாசன பகுதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அவர் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதுபற்றி பார்ப்பதாக தி.மு.க. குழுவினரிடம் தெரிவித்தார்.

    கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.

    மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    • கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு 2018-2019, 2019-2020-ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா நடத்தி சென்றுள்ள நிலையில் தற்போது காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிருநாளில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

    ஜனாதிபதியாக பதியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதால் மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு மைசூரு தசரா விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 412-வது தசரா விழாவாகும்.

    கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டதால், இந்த ஆண்டு தசரா விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மைசூருவில் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    ஆண்டுதோறும் மைசூரு தசரா விழாவை முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதாவது மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்கள் தூவி சிறப்பு பூஜை நடத்தி விழாவை பிரபலங்கள் தொடங்கிவைப்பார்கள்.

    இந்நிலையில், மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க இருப்பதாக கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இந்த ஆண்டு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க வருகை தருவதால், மைசூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசாருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    • பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கூறி இருந்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை நாளை சந்தித்து பேசுகிறார்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கூறி இருந்தார்.

    இந்த சூழலில் இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். 11.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார். அதன் பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

    அப்போது தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்வதையொட்டி இன்றே அதிகாரிகள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

    ×