நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

பொருளாதார அதிகாரம், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கிளன் நிலையை வலுப்படுத்துகிறது.ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
Published on

நாட்டில் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

அனைத்து இடங்களிலும் திருவிழா சூழலை காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது.

ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது.

காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர்.

சரோஜினி நாயுடு, ரமாதேவி ஆகியோர் பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.

மகளிர் அதிகாரத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் பெண்கள் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தற்போது ஒவ்வொரு துறையிலும் பெண்களின் சாதனை அதிகமாக உள்ளது.

பொருளாதார அதிகாரம், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com