search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தலைவர் திரவுபதி முர்மு"

    • 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
    • பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

    அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாடு முழுக்க தீபாவளி கொண்டாட்டங்கள் கோலகலம்.
    • குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

    பிரதமர் மோடி தவிர, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய மந்திரிகளான பியூஷ் கோயல், ஸ்மிருதி இராணி ஆகியோரும் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசினர். நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசு தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
    • தேநீர் விருந்தில் துணை ஜனாதிபதியுடன் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

    நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும்.

     

    அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி குடியரசு தலைவவர் திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவவர் மாளிகை) தேநீர் விருந்து அளித்தார். இதில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது துணைவர் சுதேஷ் தன்கர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இவர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். 

    • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 6ம் தேதி வரை அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார்.
    • பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார். அங்கு, ஒடிசா மாநிலத்தின் ராய்ரங்பூர், பஹத்பூர் மற்றும் பரிபடா மாவட்டங்களுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (மே 4 ஆம் தேதி) பஹாத்பூரில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைத் தொடர்ந்து, ஹட்பத்ராவில் உள்ள பிரம்மா குமாரிகள் மையத்திற்குச் செல்லும் அவர், அங்கு பிரம்மா குமாரிகளின் மையத்தில் 'போதையில்லா ஒடிசா' பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

    இன்று மாலை, ரைரங்பூர் ஸ்டேடியத்தில் ரைரங்பூர் நகராட்சியால் அவருக்கு மரியாதை அளிக்கப்படும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    மே 5ம் தேதி அன்று (நாளை) குடியரசுத் தலைவர் முர்மு பண்டிட் ரகுநாத் முர்முவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அவர் சிமிலிபால் சரணாலயத்திற்கு செல்கிறார்.

    மே 6ம் தேதி, பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

    • புத்தாண்டு விடியல், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
    • குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.

    தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:


    இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும். இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.

    முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×