குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திர தின தேநீர் விருந்து.. துணை ஜனாதிபதியுடன் கலந்து கொண்ட பிரதமர் மோடி..!

சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார். தேநீர் விருந்தில் துணை ஜனாதிபதியுடன் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திர தின தேநீர் விருந்து.. துணை ஜனாதிபதியுடன் கலந்து கொண்ட பிரதமர் மோடி..!
Published on

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும்.

அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி குடியரசு தலைவவர் திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவவர் மாளிகை) தேநீர் விருந்து அளித்தார். இதில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது துணைவர் சுதேஷ் தன்கர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இவர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com