குடியரசு தலைவர் முர்மு- பிரதமர் மோடி சந்திப்பு

நாடு முழுக்க தீபாவளி கொண்டாட்டங்கள் கோலகலம். குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து.
குடியரசு தலைவர் முர்மு- பிரதமர் மோடி சந்திப்பு
Published on

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

பிரதமர் மோடி தவிர, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய மந்திரிகளான பியூஷ் கோயல், ஸ்மிருதி இராணி ஆகியோரும் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசினர். நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசு தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com