search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 பேர் பலி"

    ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaBoatTragedy #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள ஹசினா மற்றும் கண்ட்கிபூர் கிராமங்களில் இருந்து சுமார் 19 குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாட ஹுகிடோலா தீவுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற படகில் 6 ஆன்கள், 27 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் பயணம் செய்தனர்.

    மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு நிலைதடுமாறியது. இதில்  படகு நிலை தடுமாறி ஆற்றில் கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும்  நீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் உள்ளூர் மீனவர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 45 பேரை உயிருடன் மீட்டனர். 



    இந்நிலையில், இன்று அதிகாலை ஆற்றில் இருந்து 9 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும், காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.
    #OdishaBoatTragedy #NaveenPatnaik
    கோவையில் 9-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரிதாக காணப்பட்டதோடு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்த தகவலின் பேரில் செல்வபுரம் மற்றும் மாநகர மேற்கு பிரிவு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ஸ்மா‌ஷர்ஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கும் பேட்மிண்டன் பிரிமீயர் லீக் மும்பையில் இன்று தொடங்குகிறது. #PremierBadmintonLeague
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் 2013-ம் ஆண்டு இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி தொடங்கப்பட்டது.

    2014, 2015 ஆகிய 2 ஆண்டுகள் போட்டி நடக்கவில்லை. அதன்பின் 2016-ம் ஆண்டு பிரிமீயர் பேட் மிண்டன் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடந்தது.

    இந்நிலையில், 4-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி இன்று தொடங்குகிறது. ஜனவரி 13-ம் தேதி வரை 23 நாட்கள் நடக்கிறது.

    சென்னை ஸ்மா‌ஷர்ஸ், ஐதராபாத் ஹண்டர்ஸ், புனே 7 ஏசஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், டெல்லி டே‌ஷர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், அவாத் வாரியர்ஸ், ஆமதாபாத் ஸ்மா‌ஷர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணிக்கும் தலா 6 ஆட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கும்.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். 27 ஆட்டம் கொண்ட லீக் போட்டிகள் ஜனவரி 10-ந்தேதி வரை நடக்கிறது.



    முதல் அரை இறுதி ஜனவரி 11-ந்தேதி, 2-வது அரை இறுதி 12-ந்தேதி நடக்கிறது. இறுதிப் போட்டி ஜனவரி 13-ந்தேதி நடக்கிறது.

    இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா, காஷ்யப், ஸ்ரீகாந்த், சாய் பிரஸீத், அஸ்வின் மற்றும் ஸ்பெயினின் கரோ லினா மரின் போன்ற முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள்.

    மும்பை, ஐதராபாத், புனே, அகமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.

    மும்பையில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பி.வி.சிந்து உள்ள ஐதராபாத் - கரோலினா மரின் உள்ள புனே அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 25-ம் தேதி ஐதராபாத்துடன் மோதுகிறது. ஐதராபாத் (2013), டெல்லி (2016), சென்னை (2017) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #PremierBadmintonLeague
    ஆந்திராவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தாடே பள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு வீடுகளில் ஏராளமானோர் காசு வைத்து சீட்டாடுகிறார்கள். இந்த சூதாட்டம் பற்றி புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் வந்தது

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று தாடேபள்ளிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது டி.எஸ்.பி. ராமஆஞ்சநேயலு ஒரு வீட்டில் காசுவைத்து சூதாடிய 13 பேரை கைது செய்தார். இதில் 4 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #Pakistan #WallCollapse
    கராச்சி:

    பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் உள்ளது குலாம் சர்வார் ஷம்பானி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.



    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    மேலும், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 குழந்தைகள் பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #WallCollapse
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 9-வது கட்டமாக இன்று காலை மேலும் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 8 கட்டங்களாக மொத்தம் 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 9-வது கட்டமாக இன்று காலை மேலும் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 9 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்த தற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

    நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். #ActorRajkumar #Veerappan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்ட காஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 30-7-2000 அன்று சந்தன கடத்தல் வீரப்பன், அவனது கூட் டாளிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மற்றவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.

    இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு கூறினார்.



    குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் 9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக அரசு வக்கீல் தனகோட்டிராம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இந்த வழக்கு தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டதாகும். இந்த வழக்கில் அரசு தரப்பில் 47 சாட்சிகள், 51 ஆவணங்கள், 32 சான்று பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் விரிவான நகலை பெற்று, இரு மாநில அரசு அதிகாரிகளுடனும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து 9 பேர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்.

    இவ்வாறு வக்கீல் தனகோட்டிராம் கூறினார்.  #ActorRajkumar #Veerappan



    கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #ActorRajkumar #Veerappan
    கோபி:

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-7-2000 அன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.

    அப்போது வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா மற்றும் கூட்டாளிகள் 11 பேர் சேர்ந்து துப்பாக்கி முனையில் ராஜ்குமாரை கடத்திச் சென்றனர்.



    108 நாட்கள் பிணைக் கைதியாக ராஜ்குமார் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரை வீரப்பன் விடுவித்தான்.

    ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக தாளவாடி போலீசார் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 18-10-2004 அன்று வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடந்தபோது மல்லு என்பவர் இறந்தார். ரமேஷ் என்கிற தமிழ் தலைமறைவானார்.

    இதையடுத்து கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது.

    இந்த வழக்கில் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளிலும், இந் திய படைக்கலன் சட்டப்படியும், மற்றும் வெடிபொருள் தடை சட்டப்படியும் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 47 பேர் சாட்சியளித்தனர்.

    வழக்கு நடந்தபோதே கன்னட நடிகர் ராஜ்குமார், மரணம் அடைந்தார். இந்த வழக்கு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது 25-ந் தேதி அதாவது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி மணி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    இதற்காக வழக்கில் சம்பந்தப்பட்ட கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 8 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். புட்டுச்சாமி ஆஜராகவில்லை.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லாததாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

    18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று கூறப்பட்டதையொட்டி கோபி கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    காலை 9 மணி முதல் கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீர்ப்பு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நீடித்தது.  #ActorRajkumar #Veerappan


    சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் கத்தியால் குத்தி 9 பேரை கொன்ற கொடூர குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். #ChinaCarAttack
    பீஜீங்:

    சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார்.

    இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த பகுதியில் இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChinaCarAttack
    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். #Pakistancoalmine #coalminecollapse
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் சிலர் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றனர். முறையாக அனுமதி பெற்று இயங்கிவரும் சுரங்கங்களும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.



    அவ்வகையில், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று  9 பேர் உயிரிழந்தனர்.

    டார்ரா ஆடம் கேல் பகுதி அருகேயுள்ள அக்குர்வால் கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததால் உள்ளே பணியாற்றி கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்தனர்.  #Pakistancoalmine  #coalminecollapse

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், செல்வராகவன் மற்றும் போலீசார், கெலமங்கலம் ரயில்வே நிலையம் மற்றும் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்க பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த கெலமங்கலம் முருகேசன் (35), மாதேஷ் (28), மஞ்சுநாத்(23), கிருஷ்ணன்(29), செட்டிப் பள்ளி ரமேஷ் (30), தொட்டகானப்பள்ளி லோகேஷ் (29), கெலமங்கலம் சுரேஷ் (24), சசிகுமார்(34), அண்ணா நகர் கோவிந்தன் (42) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பணம் ரூ 450யை பறிமுதல் செய்தனர்.

    வீட்டில் இருந்த 9-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழ மறவன் குடியிருப்பு சிவன்கோவில் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

    நேற்று காலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் மாணவியின் தந்தை புகார் செய்தார்.  புகாரில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 21) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து என் மகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று விட்டார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டுத் தரவேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக் டர் சாந்தாகுமாரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். ராஜா மீது கடத்தல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செல்போன் டவர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் எங்கு இருக்கிறார் கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
    ×