என் மலர்

  நீங்கள் தேடியது "badminton premier league"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ஸ்மா‌ஷர்ஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கும் பேட்மிண்டன் பிரிமீயர் லீக் மும்பையில் இன்று தொடங்குகிறது. #PremierBadmintonLeague
  மும்பை:

  ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் 2013-ம் ஆண்டு இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி தொடங்கப்பட்டது.

  2014, 2015 ஆகிய 2 ஆண்டுகள் போட்டி நடக்கவில்லை. அதன்பின் 2016-ம் ஆண்டு பிரிமீயர் பேட் மிண்டன் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடந்தது.

  இந்நிலையில், 4-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி இன்று தொடங்குகிறது. ஜனவரி 13-ம் தேதி வரை 23 நாட்கள் நடக்கிறது.

  சென்னை ஸ்மா‌ஷர்ஸ், ஐதராபாத் ஹண்டர்ஸ், புனே 7 ஏசஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், டெல்லி டே‌ஷர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், அவாத் வாரியர்ஸ், ஆமதாபாத் ஸ்மா‌ஷர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

  ஒவ்வொரு அணிக்கும் தலா 6 ஆட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கும்.

  லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். 27 ஆட்டம் கொண்ட லீக் போட்டிகள் ஜனவரி 10-ந்தேதி வரை நடக்கிறது.  முதல் அரை இறுதி ஜனவரி 11-ந்தேதி, 2-வது அரை இறுதி 12-ந்தேதி நடக்கிறது. இறுதிப் போட்டி ஜனவரி 13-ந்தேதி நடக்கிறது.

  இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா, காஷ்யப், ஸ்ரீகாந்த், சாய் பிரஸீத், அஸ்வின் மற்றும் ஸ்பெயினின் கரோ லினா மரின் போன்ற முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள்.

  மும்பை, ஐதராபாத், புனே, அகமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.

  மும்பையில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பி.வி.சிந்து உள்ள ஐதராபாத் - கரோலினா மரின் உள்ள புனே அணிகள் மோதுகின்றன.

  சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 25-ம் தேதி ஐதராபாத்துடன் மோதுகிறது. ஐதராபாத் (2013), டெல்லி (2016), சென்னை (2017) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #PremierBadmintonLeague
  ×