என் மலர்
நீங்கள் தேடியது "Wall collapse"
- கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது.
- உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
தற்போது கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது. இன்று காலை கட்டிடத்தின் படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (52), மூக்காயி (50), தொண்டிச்சாமி (55), கட்டையன்(43) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது படிக்கட்டு, சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேரும் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றினர்.
அப்போது அதில் சிக்கியிருந்த மூக்காயி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தலைமறைவான கட்டிட பொறியாளர், காண்டிராக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கட்டுமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
- 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இன்று காலை அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டுமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 10 பிரேதங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஒட்டி கோட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், கிளை சிறைச்சாலை, நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. மைதானத்தில் உள்ள வகுப்பறைகளில் 10-ம், பிளஸ்-2 வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) பிளஸ்-2-வுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மைதானத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் உடைத்துள்ளனர். தற்போது அந்த பாதை வழியாக மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இதனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு, அதன் வழியாக காப்பி அடிப்பதற்காக ‘பிட்’ கொடுப்பதற்கும், சமூக விரோதிகள் அதன் வழியாக விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இதே போல் கிளை சிறைச்சாலையின் சுவரையும் உடைக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குவதால், அதற்குள் உடைந்த சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

