என் மலர்

  நீங்கள் தேடியது "Nine killed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். #Nigerian #BrutalAttack
  அபுஜா:

  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.

  கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உள்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

  அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேவாலயம் முன் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

  இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியையும், அவருடன் இருந்த மற்றொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.   #Nigerian #BrutalAttack 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். #Pakistancoalmine #coalminecollapse
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் சிலர் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றனர். முறையாக அனுமதி பெற்று இயங்கிவரும் சுரங்கங்களும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.  அவ்வகையில், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று  9 பேர் உயிரிழந்தனர்.

  டார்ரா ஆடம் கேல் பகுதி அருகேயுள்ள அக்குர்வால் கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததால் உள்ளே பணியாற்றி கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்தனர்.  #Pakistancoalmine  #coalminecollapse

  ×