என் மலர்

    நீங்கள் தேடியது "Nigerian"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோசடி செய்த நைஜீரிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு கைது செய்தனர்.
    • இவ்வழக்கில் நைஜீரிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    நிலக்கோட்டை அருகே பள்ளபட்டிைய சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(45). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் வெளிநாட்டில் வேலை குறித்து இணையதளத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது. அதை பின்பற்றிய வெங்கடா ஜலபதி எதிர்முனையில் பேசிய நபர் கனடாவில் வேலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வெங்கடாஜலபதி அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்தை செலுத்தினார்.

    ஆனால் அதன்பின்னர் வேலை குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கடாஜலபதி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடாஜலபதியிடம் போனில் பேசியது நைஜீரியாவை சேர்ந்த உச்சண்ணா கிறிஸ்டியன்(45) என தெரியவந்தது.

    ஈேராடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி யிருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் ேஜ.எம்.1 கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா மோசடி செய்த வாலிபர் உச்சண்ணா கிறிஸ்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டவர் கத்தியால் குத்தியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
    தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டவர் கத்தியால் குத்தியதில் 8 பேர் காயம் அடைந்தனர். 

    டாடா கார்டன் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வழியில் சென்றவர்களையெல்லாம் அவர் கத்தியால் குத்தினார். 

    தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர். படுகாயம் அடைந்த 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். #Nigerian #BrutalAttack
    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.

    கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உள்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேவாலயம் முன் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியையும், அவருடன் இருந்த மற்றொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.   #Nigerian #BrutalAttack 
    ×