என் மலர்
நீங்கள் தேடியது "gunmen"
- 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இஸ்தான்புல் நகர சான்டா மரியா தேவாலயம்
- தேவாலயத்திற்கு உள்ளே நுழைந்தவரை 2 பேர் பின் தொடர்ந்தனர்
மேற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஐரோப்பாவிலும் பரந்து விரிந்திருக்கும் நாடு, துருக்கி. இதன் தலைநகரம் அங்காரா (Ankara).
துருக்கியின் இஸ்தான்புல் (Istanbul) நகரில் உள்ளது 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சான்டா மரியா தேவாலயம்.
நேற்று காலை, வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக அங்கு வந்திருந்தவர்கள், மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமூடி அணிந்த 2 பேர் அந்த தேவாலயத்தின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர்.
அப்போது உள்ளே நுழைந்த ஒருவரை அவர்கள் பின் தொடர்ந்தனர்.
இருவரும், திடீரென அவரை நோக்கி சுட்டனர். இதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார். சுட்டவர்கள் உடனே அங்கிருந்து தப்பி விட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
உயிரிழந்தவருக்கு 52 வயது என்றும், ஞானஸ்னானம் பெற இருந்தவர் என்றும் அவரது உறவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்தான்புல் நகர மேயர், எக்ரெம் இமாமொக்லு, "அமைதியான இப்பகுதியில் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானது. நமது நகரத்தின் அமைதியை கெடுக்கும் வகையில் மத வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என தெரிவித்தார்.
துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், இத்தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
பின்னர், துருக்கியின் உள்துறை மந்திரி, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பிடிபட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ரஷியர் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- பிரபலமான சுற்றுலா இடத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
- பலி எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறுபேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேரந்தவர்கள். துப்பாக்கிச்சூடு பிரபலமான சுற்றுலா பகுதியில் நடைபெற்றது.
இது தொடர்பாக ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும். பொறுப்பேற்கவில்லை.
உயிரிழந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தகவல் வெளியிடாத நிலையில், ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தங்கள் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
காயம் அடைந்தவர் காபுல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தலிபான் அரசுக்கு எதிரான குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறியது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.
கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உள்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேவாலயம் முன் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியையும், அவருடன் இருந்த மற்றொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். #Nigerian #BrutalAttack
