search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people"

    • ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
    • அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

    • கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    முசிறி பழைய ஆர்டிஓ அலுவலகம் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தொட்டியம் திருநாராயணபுரம் அரிசனத் தெரு வை சேர்ந்த ராமசாமி மகன் ராகுல் (வயது23) ,தொட்டியம் வடுகர் தெருவை சார்ந்த ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத் (19) , அரசலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் வசந்த (23) ஆகிய மூன்று பேரும் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த கட்டைப் பையை போலீசார் வாங்கி சோதனை செய்தனர். கட்டைப் பையில் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது .
    • சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துகாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து சைட்லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

    ஆனால் சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார் சிறுமி யின் தாயார் ஆகியோர் கைது செய்து கோபி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.

    இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இதனால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள கஸ்பா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (51). இவரது கணவர் பழனிசாமி (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது.

    கட்டிட வேலை பார்த்து வந்த பழனிசாமி, கை, கால், இடுப்பு வலி போன்ற உடல் உபாதைகளால் கடந்த 3 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை. மேலும், தனது மகளுக்கு திருமணமாகவில்லை என மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் உடல் உபாதை காரணமாக பழனிசாமி சம்பவத்தன்று இரவு எலி மருந்தை மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டார்.

    இதுகுறித்து தெரிய வந்ததையடுத்து அவரது மனைவி கோவிந்தம்மாள் உறவினர்கள் உதவியுடன் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கூச்சிக் கல்லூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (54). இவரது 2வது மகன் கலைநாதன் (24).

    இவர், பவானி, காலிங்கராயன்பா ளையம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திரும ணமாகவில்லை.

    கலைநாதனுக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. அதற்காக அந்தியூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றுவந்த கலைநாதனுக்கு அன்றைய தினம் நள்ளிரவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    குடும்பத்தினர் விசாரித்த தில், விஷத்தை குடித்து விட்டதாக கலைநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கலைநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையைச் சேர்ந்தவர் கவுதம் (24). பைக் மெக்கானிக். இவரது தந்தை கிட்டான் (58). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கவுதமின் தாய் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கவுதமின் மூத்த சகோதரி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதையில் அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாயில் புண் இருந்த காரணத்தால் சரிவர மருந்து, மாத்திரைகளை சாப்பிட முடியவில்லையாம்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு , மகன் கவுதம் வீட்டில் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அதன் காரணமாக அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, கவுதமின்பாட்டி அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த கவுதம் தந்தை கிட்டானை சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கிட்டான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தனி ப்பிரிவு போலீசார் மற்றும் சித்தோடு போலீசார் காலிங்க ராயன்பாளையம் கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் 3 வாலிபர்கள் இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் (24), காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம். வீதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மெய்யப்பன் (19) மற்றும் சித்தார், குப்பிச்சிபாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் (24) என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

    மேலும் அந்த வீட்டில் சிறு சிறு பொட்டலங்களாக 300 கிராம் எடையுள்ள 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பொட்ட லங்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியான காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி 3 பேர் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சீமான்(வயது 28). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிரஞ்சீவி என்பவருக்கும் ஜல்லிக்கட்டு காளை விடுவதில் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சீமானுக்கும், சிரஞ்சீவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சீமானை சிரஞ்சீவி மற்றும் அவரது உறவினர்கள் ஆனந்தராஜ், கதிரேசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சீமான் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
    • இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெள்ளன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்த வீரன் மகன் கேசவன்(21). இவர் அவரது தந்தை டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரது நண்பரை பார்த்து விட்டு வந்து வீட்டில் அவரது அம்மாவின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கேசவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதன்பேரில் சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல்(27). இவர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பூங்கம்பள்ளியில் அவரது மனைவி, குழந்தையுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சக்திவேலுக்கு மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்த சக்திவேல் சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியசேமூர் கனிராவுத்தர்குளம், காந்திநகரை சேர்ந்தவர் இளங்கோ (19). இவர் காரைவாய்க்கால் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் சி.ஏ. படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த இளங்கோ செல்போனில் சிறிது நேரம் யாரிடமோ பேசிவிட்டு சாப்பிடாமல் தூங்க சென்று விட்டார். அதிகாலை இளங்கோவின் மாமனார் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் இளங்கோ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டிபட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • கஞ்சா மற்றும் புகையிலை விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது நாடார் தெருவை சேர்ந்த காளிராஜ்(30), பாலவிக்னேஷ்(38), வேல்முருகன்(35) ஆகியோர் பள்ளி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடமிருந்து 18 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.13870 ஆகும். புகையிலை பொருட்களை விற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கம்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் கூடலூர் மெயின்ேராட்டில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குரங்குமாயன் தெருவைசேர்ந்த ராஜா(28).

    உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஜெயக்குமார்(28) ஆகியோர் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்து தப்பிஓடிய லதா என்பவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல சின்னமனூர் அருகில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில் ஒரு கிலோ கஞ்சாவை பைக்கில் எடுத்து வந்த அருண்குமார்(21), பொன்னுத்தாய்(68) ஆகிய 2 பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×