search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேர்"

    • பிள்ளையார் விளையில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது.
    • கோவில் திருவிழாவையொட்டி ஊர் எல்லை வரை மின்விளக்கு அலங்காரம் செய்ய அனுமதி கோரி சாலை மறியல் போராட்டம்

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பிள்ளையார் விளை யில் ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் உள்ளது.

    இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் இறுதியில் வாகன பவனி நடக்கும்.விழாவைெயாட்டி ஊர் எல்லை வரை மின்விளக்கு அலங்காரம் செய்ய அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

    இதனால் ஊர் மக்கள் ராஜாக்கமங்கலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. தொடர்ந்து அவர்கள் கணபதி புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    பின்னர் போலீசார் அவர்களை விடுவித்தனர். ஆனால் அவர்கள் அங்கி ருந்து செல்ல வில்லை. இதனை தொடர்ந்து பிள்ளையார் விளை ஊர் தலைவர் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 63), அய்யப்பன் (37), சசிகுமார் (45), அருள் முருகன் (46), ஜவகர் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கந்து வட்டி புகார்
    • முக்கிய ஆவணங்கள் சிக்கியது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் தக்கலை மூலச்சல் பகுதியைச் சேர்ந்த சீமோன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞானஜெபின் அதிக வட்டி வசூல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இன்ஸ்பெக்டர் உமா சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.ஞானஜெபின், அவரது மனைவி பெனிலா மற்றும் ஞான ஜெபியின் நண்பர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த ஞானஜெபின் தலைமறைவானார்.இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற் றப்பட்ட ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை மறைவாகியுள்ள ஞான ஜெபின் மற்றும் அவரது நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஞான ஜெபின் காங்கிரஸ் பிரமு கர் என்பதும் குறிப்பி டத்தக்கதாகும்.

    • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
    • அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதிலும் குறிப்பாக தககலை, நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டார்.

    இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களிலும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகன நோதனையும் நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை அழகியமண்டபம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.

    அவர்கள், போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர், மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். சுமார் 1 கி.மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்ற போலீ சார், வெள்ளிகோடு என்ற இடத்தில் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களை விசாரித்த போது, 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து அவர்களை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது 3 பேரும் பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரிய வந்தது.

    இவர்கள், நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் தட்டாமலையைச் சேர்ந்த மாஹின் (வயது 21), வடக்காவிளை செய்யது அலி (23), முளவன பர்ஜாஸ் (20) என தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    • குண்டர் சட்டத்தில் கைது
    • பாளை. ஜெயிலில் அடைப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கஞ்சா, குட்கா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். தொடர்ந்து குற்ற செயல்களை ஈடுபடுப வர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது.

    இந்த நிலையில் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி லீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் சிங் (வயது 21), வட்டகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் (27) இவரையும் அஞ்சுகிராமம் போலீசார் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்திருந்தனர்.

    இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். நாகர்கோவில் ஜெயிலில் இருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்ட னர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

    • போலீசார் தீவிர பரிசோதனை
    • போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வழுக்கம்பாறை சுடுகாடு பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் நிற்பதைப் பார்த்தார். அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா கடத்துவதும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த அவர்களது பெயர் கார்த்திக் (வயது 20), விவேக் (20), அருண் (22), பிரதின் (22), முத்து (20), சதீஷ் (20) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    • சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது .
    • சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துகாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து சைட்லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

    ஆனால் சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார் சிறுமி யின் தாயார் ஆகியோர் கைது செய்து கோபி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கேள்வித்தாளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டி ருந்தன. ஒரு வினாவுக்கு 1½ மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
    • குரூப்-4 பேர் தேர்வில் வெற்றி பெற்றதும் , சான்றிதழ் சரிபார்ப்புக்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

    சேலம்:

    தமிழகத்தில் 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-4 தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

    சேலம், நாமக்கல்...

    சேலம் மாவட்டத்தில் 291 மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 885 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 191 மையங்களில் 47 ஆயிரத்து 608 பேரும் குரூப்-4 தேர்வு எழுதினர்.

    இதில் சேலம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 678 பேர் பங்கேற்கவில்லை. அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 615 பேர் தேர்வு எழுதவரவில்லை.

    கேள்வித்தாளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டி ருந்தன. ஒரு வினாவுக்கு 1½ மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில் அரசியல் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இது கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

    ஹால்டிக்கெட்

    நேற்று தேர்வர்கள் தங்களுடைய தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்ற குரூப்-4 ஹால்டிக்கெட் சரிபார்க்கப்பட்டு அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு பேருடைய ஹால்டிக்கெட்டி லும் தேர்வு அறை அதிகாரி கையெழுத்து போட்டு, தேர்வு எழுதுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த ஹால்டிக்கெட்டை தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏனெனில் தேர்வர்கள் குரூப்-4 பேர் தேர்வில் வெற்றி பெற்றதும் , சான்றிதழ் சரிபார்ப்புக்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

    அப்போது, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டை கேட்பார்கள். அதில், தேர்வு அறை அதிகாரி யால் கையெழுத்து போடப்பட்டுள்ளதா? அந்த கையெழுத்து சரியான கையெழுத்தா? என ஆய்வு செய்வார்கள். மேலும் ஹால்டிக்கெட்டில் இடம் பெற்ற புகைப்படம் தேர்வர்களுடையது தானா? என ஒப்பிட்டு பார்ப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 17 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டி–யல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 739 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 972 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 18 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
    • தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனை செய்ததில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோ தமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்டத்தில் மலையம்பாளையம், பவானிசாகர், வெள்ளோடு, கொடுமுடி, பங்களாபுதூர், பெருந்துறை , சிவகிரி , சென்னி மலை காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 108 மது பாட்டி ல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோட்டில் புகையிலை பொருட்கள்- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடா சலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எண்ணமங்கலம், ராம கவுண்டன் குட்டை பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சோத னை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் - ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் என தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர் அவரிடமிருந்து 105 புகையிலை, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதேப்போல் சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சத்தியமங்கலம்-பவானிசாகர் ரோட்டில் தரைபாலம் அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்தி ருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    • பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் பிரிவின் சார்பில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

    • கருங்கல்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளை யம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது.

    போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (58), கருங்கல்பாளையம் காவிரி ரோட்டை சேர்ந்த சிவா என்கிற சிவகுமார்(49), கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (49), கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய குமார்(44), கருங்கல்பாளை யம் கமலா நகரைச் சேர்ந்த முருகேசன்(51) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×