சுசீந்திரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேர் கைது

போலீசார் தீவிர பரிசோதனை போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை
சுசீந்திரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேர் கைது
Published on

கன்னியாகுமரி:

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வழுக்கம்பாறை சுடுகாடு பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் நிற்பதைப் பார்த்தார். அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா கடத்துவதும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த அவர்களது பெயர் கார்த்திக் (வயது 20), விவேக் (20), அருண் (22), பிரதின் (22), முத்து (20), சதீஷ் (20) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com