என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 ஆயிரம்"

    • உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    • பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் பிரிவின் சார்பில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

    • 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது
    • நெடுஞ்சாலை துறை மூலம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்று நடுதல் பணி நேற்று துவங்கியது. கோனேரிபாளையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பகுதியில் நேற்று மரக்கன்று நடுதலை நெடுஞ்சாலை துறை பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி தொடங்கிவைத்தார்.

    இதே போல் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டாவில் அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் வண்ண பூக்கள் செடிகளை நட்டுவைத்தார்.

    பின்னர் கோட்ட பொறியாளர் பேசுகையில், துறைமங்கலம், நான்குரோடு, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, அரியலூர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலக்கரை ரவுண்டானாவை அழகு படுத்தும் விதமாக பல்வேறு வகையான வண்ண பூக்கள் பூக்கும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது. மேலும் பெரம்பலூர் -துறைமங்கலம் 3 ரோடு பகுதியிலிருந்து பாலக்கரை வரைஉள்ள சாலை சென்டர் மீடியனில் பல்வேறு வகையான வண்ண பூக்கள் பூச்செடிகள் நடப்படவுள்ளது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் மாயவேல், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×