சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் கைது

சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது .சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் கைது
Published on

கோபி:

கோபி அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துகாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து சைட்லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஆனால் சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார் சிறுமி யின் தாயார் ஆகியோர் கைது செய்து கோபி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com